ஸ்ரீசக்ர பூஜையும் , கடைசி பிறவியும் :
ஒருவருக்கு ஸ்ரீ சக்ர பூஜை செய்ய ஏற்படும் விருப்பம், மற்றும் அதனை பற்றி அறியும் ஆவல் ஏற்படுவதே அவர்களின் முந்தய பிறவிகளின் புண்ணியங்கள் கைகூடியதால்.........மற்றும் நற்செயல்களின் விளைவுகளால் லலிதாம்பிகையின் கருணை பார்வை அவர்கள் மேல் விழுந்ததால் மட்டுமே அரிதினும் அரிய வாய்ப்பு பெறுவர் என்பதே ஸ்ரீ சௌந்தர்யலஹரீ -யில் ஸ்லோகம் 11, மற்றும் 12- ல் , ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்களின் வாக்கும் ஆகும். அத்தகையோருக்கு அதுவே கடைசி பிறவியாகும் என்பதே சிவமே தாமாய் வந்த .......சங்கரரின் ( பகவத்பாதாளின் ) வார்த்தையால் அறியலாம்.
சமீபத்தில் மிகவும் பழமையான பதிப்பு - 1924, ஏழாவது பதிப்பு -1968.......... தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகளின்
ஸ்ரீ சௌந்தர்யலஹரீ விளக்கவுரை - இதனில் மிகவும் விஸ்தாரமாக ஸ்ரீ சக்ர பூஜை, மஹாமேரு ......அந்த பூஜைகளை பஞ்சதசீ உபதேசம் பெற்று செய்யும் சாதகனின் நிலை பற்றி விவரித்துள்ளார்.
ஸ்ரீ ஷோடசாக்ஷரி உபதேசம் பெற்று 44 கோணங்களுக்கும் முறைப்படி பூஜை செய்பவனாய் 44,000 ஜெப ஆவிருத்தி செய்பவருக்கு ஏற்படும் அளவற்ற ,.........பயன்களை என்ன சொல்ல ?
முறைப்படி பூஜை செய்பவருக்கு ..........இதில் சற்றே விரிவாக காண்போம்.
முறைப்படி என்பதில் ...............மடியாக , ஆச்சாரமாக ...சரியான மந்த்ர உச்சரிப்புகள் செய்பவராக ....தவறாமல் ....... சிரத்தையாக ......(bhavam) பாவத்துடன் .....உண்மையாக பூஜையை செய்தல் என்பது அடங்கும். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய அநுஷ்டானங்களை விடாமல் செய்வதற்கு உள்ளே ஒரு வைராக்கியத்தோடு, அடமாக இருத்தல் ...........
மடி மற்றும் ஆச்சாரம் :
நமது தேகத்தை அம்பிகை வசிக்கும் இடமாக இருப்பதால் .........அங்கு சில ஒழுங்கும் , தூய்மையாகவும் கடைபிடித்தல் அவசியம்.
மஹா பெரியவா கூறியதைப்போல ....
தேஹோ தேவாலய: ப்ரக்தோ ஜீவ:
ப்ரோக்தோ ஸநாதன:|
ஒருவருக்கு ஸ்ரீ சக்ர பூஜை செய்ய ஏற்படும் விருப்பம், மற்றும் அதனை பற்றி அறியும் ஆவல் ஏற்படுவதே அவர்களின் முந்தய பிறவிகளின் புண்ணியங்கள் கைகூடியதால்.........மற்றும் நற்செயல்களின் விளைவுகளால் லலிதாம்பிகையின் கருணை பார்வை அவர்கள் மேல் விழுந்ததால் மட்டுமே அரிதினும் அரிய வாய்ப்பு பெறுவர் என்பதே ஸ்ரீ சௌந்தர்யலஹரீ -யில் ஸ்லோகம் 11, மற்றும் 12- ல் , ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்களின் வாக்கும் ஆகும். அத்தகையோருக்கு அதுவே கடைசி பிறவியாகும் என்பதே சிவமே தாமாய் வந்த .......சங்கரரின் ( பகவத்பாதாளின் ) வார்த்தையால் அறியலாம்.
சமீபத்தில் மிகவும் பழமையான பதிப்பு - 1924, ஏழாவது பதிப்பு -1968.......... தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகளின்
ஸ்ரீ சௌந்தர்யலஹரீ விளக்கவுரை - இதனில் மிகவும் விஸ்தாரமாக ஸ்ரீ சக்ர பூஜை, மஹாமேரு ......அந்த பூஜைகளை பஞ்சதசீ உபதேசம் பெற்று செய்யும் சாதகனின் நிலை பற்றி விவரித்துள்ளார்.
ஸ்ரீ ஷோடசாக்ஷரி உபதேசம் பெற்று 44 கோணங்களுக்கும் முறைப்படி பூஜை செய்பவனாய் 44,000 ஜெப ஆவிருத்தி செய்பவருக்கு ஏற்படும் அளவற்ற ,.........பயன்களை என்ன சொல்ல ?
முறைப்படி பூஜை செய்பவருக்கு ..........இதில் சற்றே விரிவாக காண்போம்.
முறைப்படி என்பதில் ...............மடியாக , ஆச்சாரமாக ...சரியான மந்த்ர உச்சரிப்புகள் செய்பவராக ....தவறாமல் ....... சிரத்தையாக ......(bhavam) பாவத்துடன் .....உண்மையாக பூஜையை செய்தல் என்பது அடங்கும். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய அநுஷ்டானங்களை விடாமல் செய்வதற்கு உள்ளே ஒரு வைராக்கியத்தோடு, அடமாக இருத்தல் ...........
மடி மற்றும் ஆச்சாரம் :
நமது தேகத்தை அம்பிகை வசிக்கும் இடமாக இருப்பதால் .........அங்கு சில ஒழுங்கும் , தூய்மையாகவும் கடைபிடித்தல் அவசியம்.
மஹா பெரியவா கூறியதைப்போல ....
தேஹோ தேவாலய: ப்ரக்தோ ஜீவ:
ப்ரோக்தோ ஸநாதன:|
தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம்.
ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும்.
ஸமயாசாரம், மதாசாரம் என்று சொல்லும்போது ஒரு மதத்தின் நெறி முழுவதையும் "ஆசாரம்"என்பது குறிப்பிடுகிறது. ஆனால் பொதுவிலே ஒருத்தர் ஆசாரமாயிருக்கிறார். என்றால், மடி-விழுப்பு என்று இரண்டு சொல்லிக் கொண்டிருக்கிறோமே (வார்த்தையிலாவது இன்றைக்கு வரையில் இருக்கிற 'மடி'அடியோடு மறந்து போய்விடக் கூடாதென்றுதான் இந்த உபந்நியாஸமெல்லாம் பண்ணுவது) அதிலே மடியாயிருப்பது என்றுதான் வைத்துக் கொண்டிருக்கிறோம். மடி, விழுப்பு பார்க்கிறதுதான் ஆசாரம்;சாஸ்திரத்தில் சொன்ன பிரகாரம் ஒருத்தர் சிகை வைத்துக் கொண்டிருக்கிறார். கச்சம் போட்டு வேஷ்டி கட்டிக் கொண்டிருக்கிறார். புண்ட்ர தாரணம் (நெற்றிக்கிடுதல்) பண்ணிக் கொண்டிருக்கிறார், நாள் நக்ஷத்ரம் பார்த்துக் காரியம் பண்ணுகிறார், க்ளப்புக்கு (ஹோட்டலுக்கு) ப் போவதில்லை, எவர்ஸில்வரில் சாப்பிடுவதில்லை என்றால் அவரை ஆசாரமாயிருக்கிறார், orthodox என்கிறோம்.
இப்படியாக ஒரு மதத்தின் எல்லா நெறிகளுமே அதன் ஆசாரந்தானென்றாலும், வெளி வாழ்க்கையில் அதன் கட்டுப்பாட்டுபடி நடந்து கொண்டு, அதில் சொல்லியிருக்கிற வெளியடையாளங்களான சின்னங்கள் முதலியவற்றை மேற்கொண்டு நடந்து காட்டுவதே குறிப்பாக ஆசாரம், ஆசாரம் என்று வழங்குகிறது.
ஆனால் ஆசாரம் என்பது முழுக்க வெளி விஷயந்தான் என்று நினைத்து விட்டால் அது தப்பு. வெளி ஸமாசாரங்களாலேயே உள் ஸமாசாரங்களை, உள்ளத்தை உயர்த்திக் கொள்ள உதவுகிறதுதான் ஆசாரம்*. அதோடுகூட நேராக உள்ளத்தின் ஸமாசாரங்களையும், வாழ்க்கை நெறிகளையுங்கூட ஆசார சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கிறது.
'ஆசாரம்'என்பதைத் தமிழிலே நேராக 'ஒழுக்கம்'என்று சொல்லிவிடலாம். "உயிரினும் ஓம்பப்படும்"என்று திருவள்ளுவர் எதைச் சொல்லியிருக்கிறாரோ, அப்படி நம் பிராணனைவிட உசந்ததாகக் கருதி எதை ரக்ஷிக்க வேண்டுமோ அந்த தர்ம வழியே ஆசாரம். தர்மம் என்கிறது அகம், புறம் எல்லாவற்றிலும் எல்லா அம்சங்களையும் தழுவுகிற விஷயமல்லவா?
இங்கிலீஷில் ' character' என்பதாக ஒருத்தனின் உள் ஸமாசாரமான குணத்தையும்,
'conduct' என்று அவனுடைய வெளி ஸமாசாரமான நடத்தையையும் சொல்கிறார்கள். ஆசாரம் என்பதும் ஒழுக்கம் என்பதும் காரெக்டர், கான்டக்ட் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கிச் சேர்த்துக் கொடுப்பது. இது வெறுமனே morality,ethics என்று சொல்கிற இஹ வாழ்க்கைக்கான நன்னெறிகளாக மட்டுமில்லாமல் பர லோகத்துக்கும் உதவுவதான காரியங்களை ஸம்ஸ்காரங்களை, சினனங்களை, விதி நிஷேதங்களை (இன்ன செய்யலாம், இன்ன செய்யக்கூடாது என்பவற்றை) யும் சொல்கிறது.
புற விஷயம் மாதிரியிருந்தாலும் அக விஷயத்துக்கும் உபகாரம் பண்ணும்படியாகவும், இம்மைக்கு மட்டுமில்லாமல் மறுமைக்கும் உதவுவதாகவும் நம்முடைய ஆன்றோர்கள் வகுத்துத் தந்திருக்கிற முறையே 'ஆசாரம்'.
ஆசார விஷயங்கள்
புறத்திலிருந்து அகத்துக்கு
புறம் என்று எடுத்துக்கொண்டால், ரொம்பவும் ஃபிலஸாஃபிகலாக, வேதாந்தமாகப் போகிறபோது எல்லாவற்றுக்கும் புறத்தில், வெளியில் இருப்பது சரீரம். அன்னமயகோசம் என்று ஐந்து கோசங்களில் அதைத்தான் ஆத்மாவுக்கு ரொம்ப தூரத்தில் வைத்துச் சொல்லியிருக்கிறது. அது எப்படிப் போனால் என்ன என்று ரொம்பவும் உதாஸீனமாகத்தான் மஹா ஞானிகள் இருந்திருக்கிறார்கள். அநேக மஹான்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். மல மூத்ராதிகளைப் பூசிக்கொண்டு, புழுத்துப் போனதைத் தின்றுகொண்டு, ஸ்நானம் கிடையாது, பல் தேய்க்கிறதில்லை என்று, எங்கேயோ குப்பை கூளத்திலே கிடந்தார்கள் என்று. இதற்கெல்லாம் மாறாக ஒருத்தன் சரீர சுத்தியை இப்படியிப்படி உண்டாக்கிக் கொள்ள வேண்டும், ஆஹாரம் இப்படியிப்படி சுத்தமாயிருக்கணும், அவன் வஸிக்கின்ற இடத்தில் இப்படியாகப்பட்ட சுத்தமான அம்சங்களெல்லாம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம், ரொம்பவும் 'புற'த்திலேயிருந்து கொண்டு ஆசார சாஸ்திரங்களில் நிறையச் சொல்லியிருக்கிறது. நாம் இருக்கிற நிலையில் இப்படிப் புறசுத்தியில் கண்டிப்பும் கறாருமாக இருந்து ஆரம்பித்தால்தான், அப்புறம் என்றைக்கோ ஒருநாள் அந்த ஞானிகளுடைய நிலைக்குப் போகலாம். என்பதற்காகவே, அதாவது முடிவிலே முழுக்க ஆத்ம லோகம் என்கிற அகவாழ்விலே சேர்கிறதை லக்ஷ்யமாகக் கொண்டே சரீரம், வீடு, சுற்றுப்புறம் முதலான புற விஷயங்களின் சுத்தத்திலிருந்து ஆரம்பித்து ஆசாரங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வெளிவிஷயங்களில் என்ன கட்டுப்பாடு வேண்டிக் கிடந்தது என்று நாம் இஷ்டப்படி பண்ணினால், எல்லாம் மனஸ் இழுத்துக்கொண்டு போகிறபடிஸ போய், அதுவும் இல்லை, இதுவும் இல்லை என்றுதான் முடியும். ஆசாரம் ஆத்ம ஸாக்ஷ£த்காரத்தை உண்டாக்கி விடவில்லை என்று இந்த நாள் வேதாந்திகள் சொல்கிறது நிஜந்தான். அதாவது, உடனே, நேர்பலனாக உண்டாக்கவில்லை என்பது நிஜந்தான். ஆனால் என்றைக்கோ ஒரு நாளாவது நாம் நிஜமான வேதாந்திகளாக ஆக வேண்டுமானால், அதற்கு இப்போது நமக்கு இருக்கிற சரீர-குடும்ப-ஸமூஹ அபிமானங்களில் ஆரம்பித்துஸ இவற்றை எப்படி ஆசார ரீதியில் சுத்தப்படுத்திக் கொள்வது என்பதில் கவனம் செலுத்தி அப்படி பண்ணிக்கொண்டு போனால்தான் முடியும். ஆசாரமேயில்லாமல் ஆத்ம ஸம்பத்தை ஸம்பாதித்துக் கொள்வது என்பது எந்த ஒரு நாளுமே அந்த 'ஐடியல்'நிலைக்குப் போக முடியாமல், நம்மைக் கெடுப்பதில்தான் முடியும்.
" ஆசார ஹீநம் ந புநந்தி வேதா :"- அதாவது, ஆசாரமில்லாமல் எத்தனைதான் வேதத்தைப் படித்தாலும் அதனால் ஒருத்தனை வேதம் சுத்தனாக்கி விடாது என்று சொல்லியிருக்கிறது. எப்பேர்ப்பட்ட புண்ய தீர்த்தமானாலும் மண்டையோட்டிலே கொண்டு வந்தால் எப்படிப் பிரயோஜனப்படாதோ, எத்தனை நல்ல பசும் பாலானாலும் நாய்த்தோற் பையில் வைத்திருந்தால் எப்படிப் பானயோக்யமாகாதோ அப்படியே ஆசாரஹீனன் எவ்வளவு வேத சாஸ்திரங்களெல்லாம் படித்தவனாயிருந்தாலும் அவனிடமுள்ள வித்யை அவனுக்கும் உதவாமல் லோகத்துக்கும் உதவாமலே போகும் என்று சாஸ்திரத்திலிருக்கிறது. வேதத்தைப்பற்றி, உபநிஷத்தைப் பற்றி நன்றாகப் பிரஸங்கம் பண்ணுகிறார்கள், ரொம்ப ஆராய்ச்சி பண்ணிப் புஸ்தகங்கள் எழுதுகிறார்கள் என்பதால் அப்படிப்பட்டவர்கள் சுத்தர்கள் என்று ஆகிவிடாது. தாங்கள் ஆசாரங்களை விட்டு விட்டதால் மற்றவர்களும் விடவேண்டும் என்று இவர்கள் சொல்வதற்கும் 'வால்யூ'கிடையாது.
சுத்தர்கள் எப்படி வாழ்கிறார்களோ, தங்கள் வாழ்க்கை யுதாரணத்தாலேயே என்ன உபதேசிக்கிறார்களோ அதற்குத்தான் மதிப்பு உண்டு. தலைமுறை தலைமுறையாக அநேக சுத்தர்கள் ஆசாரங்களை அநுஷ்டித்து வந்திருப்பதால்தான் அதற்கு ஸதாசாரம், சிஷ்டாசாரம் என்ற பெயர்கள் வந்திருக்கின்றன. ஸத்துக்கள் அநுஷ்டிப்பது ஸதாசாரம். ஸத்துக்கள் என்றால் நல்லவர்கள், உத்தமர்கள். சிஷ்டர்கள் என்றால் உசந்த குணமும் தோஷமில்லாத வாழ்க்கையும் உள்ளவர்கள்;'சான்றோர்', 'மேலோர்'எனப்படுகிறவர்கள். அப்படிப்பட்டவர்கள் சாஸ்திரப்படியான ஆசாரங்களை நன்றாக அநுஸரித்துத்தான் வந்திருக்கிறார்கள். ஞானத்திலே போய் ஆத்ம ஸாக்ஷ£த்காரம் பெறுவது, பக்தியினாலே ஈஸ்வராநுபவம் அடைவது என்ற இரண்டும் ஜீவனின் உள் குணத்தை மாற்றிக் கொள்வதாகவேயிருக்க, ஆசாரமெல்லாம் சர்மா, சின்னங்கள் முதலிய வெளி விஷயம் பற்றினதாயிருக்கிறது என்று சொல்பவர்கள் சொன்னாலும் இதை விட்டால் அதற்குப் போக வழியில்லை*.
- " தெய்வத்தின் குரல் " - மஹாபெரியவா !
.... மந்திரசக்தி மிக்க உடலும் , உடுத்தும் உடைகளும் , பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் ஒரு உபாசகரின் மந்திர அதிர்வுகளால் நிறைந்து இருக்கும்.
எனவே சாதாரணமானவர்கள் ........உலகியல் எண்ணங்கள் அதிகம் உள்ளவர்கள்
இவர்களை தொடுவதால் ..........இவர்களால் அது அசுத்தமடையும் என்பதால் மடியாக ........தானே துவைத்து, தானே உலர்த்தி .....வேறு எவரும் தொடாமல் பாதுகாத்து ..........தானே சமையல் செய்து சாப்பிடுகின்றனர். நமது எண்ணங்கள் நாம் தொடும் பொருள்களில் எல்லாம் பதியும் என்பதால் .....................மடியாக ........மந்த்ர ஜபம் செய்பவர் அனைத்துவிதமான எண்ணங்களில் உழல்பவர்களிடமிருந்து விலகி ........தங்களது மந்த்ர தேக சுத்தியை பாதுகாக்கும் பொருட்டே தங்களுக்கு உரிய பொருள்களையும் மற்றவர்கள் தொட அனுமதிப்பதில்லை அல்லது விலகி இருக்கிறார்கள்.
எமக்கு தெரிந்த நண்பர் ஒருவர் .......ஜெப , தவங்கள் ..... பூஜைகளே வாழ்க்கை எனக் கொண்ட ஒருவர் .........ஒருமுறை ஓரிடத்தில் மற்ற உலகியல் மனிதர் தந்த உணவை அன்பினால் வற்புறுத்தி அளித்ததை, சாப்பிட்ட சிறிது நேரத்திலே மிகுந்த அவதிக்குள்ளானார். பின்னரே அவரின் உலகியல் எண்ண அலைகளே தன்னுடைய அவஸ்தைக்கு காரணம் என்பதை பகிர்ந்தார். சிறிது காலத்தில் அவரைப்பற்றி நண்பர் கூறியதை ஆராய்ந்து பார்த்ததில் நண்பரின் கூற்றே உண்மை எனப் புலப்பட்டது.
ஒழுங்கு நிறைந்த மந்த்ர தேகத்தை கொண்டு அவர்கள் பூஜைகள் செய்வதும் ......அதன் மூலம் மிக எளிதில் அவர்கள் மனம் மிக உயர்ந்த நிலையை எளிதாக அடைவதற்கே மடியும், ஆச்சாரங்களும் அன்றி .........மற்றவர்களை வெறுத்து ஒதுக்கி வேற்றுமை படுத்துவதற்காக அல்ல. அது வெறும் பம்மாத்து வேலை அல்ல.
அதே நேரம் மடியாக இருத்தலையும், ஆச்சாரமாக இருத்தலையுமே மிகப்பெரும் விஷயமாக, தகுதியாக எடுத்துகொண்டு மிகவும் அலட்டிக்கொள்பர்களைக் கண்டு வெறுமனே சிரித்து அவ்விடம் விட்டு அகன்ற மஹான்களையும் கண்டதுண்டு.
முதலில் வெளியில் தூய்மை ...பின்பு உள்தூய்மை தானே ஏற்பட்டு ............பூஜைகளால் மனம் உயர்ந்த நிலையில் எல்லாம் ஒன்றே என்று ஆன பின்பு இந்த மடி , ஆச்சாரம் என்பது முதல் வகுப்பே என்பது புரிந்துவிடும்.
ஆயினும் அதுவும் தேவையே .....மிகவும் நல்லதே .....ஆரம்ப சாதகர்களுக்கு ...........தொடர்ந்து கடைபிடித்தல் இயல்பாகிவிடும்.
முதிர்ந்த நிலையில் கடைபிடித்தாலும், கடைபிடிக்காமல் போனாலும் இரண்டும் ஒன்றே. ஆயினும் பெரியோர்கள் இகழ்வதும் இல்லை ....வெறுப்பதும் இல்லை தானும் கடைபிடித்து,............மற்றவர்களும் கடைபிடித்து மேல வர ஊக்குவிப்பார்கள்.
மந்திர அதிர்வுகள் , தொடும் வஸ்திரம் , பூஜை திரவியங்கள் , விக்ரஹம் , யந்திரம் ,..........எல்லாவற்றிலும் படும் , பதியும் என்பதால் மடியாக , ஆச்சாரமாக இருக்க வேண்டும் என்கின்றனர்.
பூஜையை பற்றி மஹா பெரியவா அவர்கள் தமது " தெய்வத்தின் குரல் " நூலில் கூறியுள்ளதை கீழே காணலாம் .
ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும்.
சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். ஆபீசுக்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.
ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதான பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.
இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.
இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹணம் பண்ணி, நாலு உத்தரணி தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.
வெளியூருக்குப் போதும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம்; மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.
ஐந்து மூர்த்திகள், துளஸி - வில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.
இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது 'பஞ்சாயதன பூஜை' எனப்படும். பிராசீனமாக நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவத்பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும்படியாகச் செய்தார். 'ஷண்மத ஸ்தாபனம்' என்று வருகிறபோது இவற்றோடு சுப்ரம்மணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனான குமார ஸ்வாமியையும் பூஜிக்கலாம்.
பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.
வீட்டிலே இருந்தால் 'மகா நைவேத்தியம்' எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம்.
நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம்? வெறுமே அவரிடம் காட்டுகிறோம்; பிறகு நாம்தான் புசிக்கிறோம்.
நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச்செய்வது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது எதுவுமில்லை. 'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்றுதான் அர்த்தமே தவிர, 'உண்பிக்கிறேன்' என்று அர்த்தமல்லை. 'அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்' என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும்? ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம்; ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா? செயற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமான கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும்? எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேசுவரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.
எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம்.
அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும். நல்லவர்களாவோம்!
நன்றி : காஞ்சி மடம்
மஹா பெரியவா அவர்களின் ' தெய்வத்தின் குரல் '
No comments:
Post a Comment