Wednesday, March 1, 2017

மழை பெற வேண்டி ............

வாழ  உலகினில்  பெய்திடாய் :-


Image result for krishna god with rain wallpapers hd
        எங்கும்  நல்ல   மழை  அடித்துபெய்திட  .........நண்பர்களே !  யாரேனும்  ஒருவர்   நம்மில்  சித்த சுத்தியோடு  இதனை  பாராயணம்  மற்றும்  ஜெபம்  செய்திட ,  அந்த  பரமாத்மாவை  வணங்கி .......

            சித்தம்   சுத்தமானால்   இங்கு  எதுவும்  நிகழும்.  ஊருக்கு  ஒருவர்  அல்லது  இருவர்   இருந்தாலே  போதும். அத்தகையோர்  ஆழ்ந்து  வேண்ட  மிகக்கண்டிப்பாக  நல்ல  மழை  பெய்யும். இதை  தூண்டுவதற்கே  இந்த  பதிவு .......அத்தகையோர்  பொருட்டே ( நல்லோர்  ஒருவர்  உளரேல்,  அவர்  பொருட்டு  பெய்யும்  மழை .....) திருப்பாவை   பாடலும் , வருண  ஜெபம்  செய்வதற்குரிய  மந்திரங்களும் .....................நம்மிலிருந்து தூய்மையான   உணர்வாய்  பிரார்த்தனைகள்  வெளிப்பட்டு  இயற்கை   வளங்களை  பேணிடவும் , நல்ல  மழை  நீர்  எங்கும்  பெருக்கெடுத்து  ஓடி .........காடுகள்  செழித்து .....வன  உயிரினங்களும்  நன்கு   வாழ்ந்திட   வேண்டி ............ ஒரு  சிறு  பாத்திரத்தில்  நீரினில்  ஏதேனும்  ஒரு வில்  பாதியேனும் மூழ்கி  இருக்குமாறு கைவைத்து  பாராயணமும் ,  ஜெபம்   செய்திடலாம்.

Related image


திருப்பாவை :

               ஆழி  மழை (க்) கண்ணா  ஒன்று  நீ  கை  கரவேல் 
                     
                      ஆழி உள்  புக்கு  முகந்து   கொடு  ஆர்த்து   ஏறி 

               ஊழி  முதல்வன்  உருவம்  போல்   மெய்  கறுத்து(ப்)

                       பாழிய்  அம்  தோளுடை(ப் )  பற்பனாபன்   கையில் 
                     
                ஆழி  போல்   மின்னி  வலம்புரி  போல்  நின்று   அதிர்ந்து 

                       தாழாதே   சார்ங்க  முத்தைத்த   சர  மழை  போல் 

                வாழ   உலகினில்   பெய்திடாய்   நாங்களும் 
        
                       மார்கழி   நீராட   மகிழ்ந்தேலோர்   எம்பாவாய் !

                                                                              -ஆண்டாள்  பாசுரம்.


     ஆழி - கடல் .............கடலில்  நீரினை  முகர்ந்த  கருமேகங்கள்  - கண்ணனை  நினைவுபடுத்துகின்றன.  கொடார்த்தேறி - கடலிலிருந்து  நிலப்பரப்புக்கு  கொண்டுவருகின்றன.

     பரமாத்மன்  ஆகிய   பத்மனாபன்  கையில்  உள்ள  சங்கு, மற்றும்  சக்கரம்.
      சங்கு  -  அதிர்ந்து  ஒலி  எழுப்புவது  போல ........இடி , இடித்து ........மின்னல்கள் 
சக்கரம்  மிகுந்த  ஒளியோடு  சுழல்வது   போன்று  மின்னல்கள்  மின்னுகின்றன.

     சார்ங்கம் -  வில். ........  வில்லிலிருந்து   புறப்படும்  அம்புகளைப்போன்று  மழைத்துளிகள்  சரம் ,  சரமாய்  பூமியில்  விழுகின்றன.

    வறட்சியால்  வானம்  பார்த்த  பூமியை ........நாங்களும் , உயிரினங்கள்  எல்லாம் .......... .......பெருவெள்ளமாய் பெய்து,  அழிவு  ஏற்படாமல்  பறவைகள் , கறவையினங்கள்  வாழ்ந்திட  ஏதுவாக  வளம் கொளித்திட  செய்யும்   வகையாய்   மழை  பெய்யுமாறு   வருணனையும்   வேண்டி ,  

      எங்கும்  நிறைந்த  பரமாத்மனாகிய   கண்ணனை   நினைத்து ......  மேகம் , கடல் நீர் .....மழை  நீர் .....இடி , மின்னல்  ......எல்லாவற்றிலும்  கண்ணனை   நினைத்து   மார்கழி   நீராடி , மழை  வேண்டி  விண்ணப்பம்  செய்கின்றாள்   இப்பாசுரம்   மூலம்  ஆண்டாள்.

Image result for krishna images at rainy


வருண  ஜெபம் :-

                  ஓம்  ஜூம்பகாய    வித்மஹே 

                  பாச  ஹஸ்தாய   தீமஹி 

                  தந்நோ   வருண   ப்ரசோதயாத்:

     (  குறைந்தது  108  முதல்  1008 வரை   ஜெபம்   செய்யலாம்  )
   1.  சந்த்ர    ப்ரபம்    பங்கஜ   ஸன்னிவிஷ்டம் 
        
        பாசாங்குசாபீதி   வரான்   ததானம் 

       முக்தா   கலபாஞ்சித   ஸர்வகாத்ரம் 

        த்யாயேத்   ப்ரஸன்னம்   வருணம்  ஸுவ்ருஷ்ட்யை  2.  த்வம்வை   ஜலபதிர்பூத்வா   ஸர்வஸஸ்யாபிவ்ருத்தயே 
            
      நிமந்த்ரிதோ   மஹாசேன   பூர்வம்   த்ரையோக்ய   ரக்ஷனே 

      அஸ்மாபி:  ப்ரார்த்திதோ   மந்த்ரை:  அனாவ்ருஷ்டி    ப்ரபீடிதை:

      அத்யத்ரைலோக்ய    ரக்ஷார்த்தம்   அப: க்ஷிப்ரம்   ப்ரவர்ஷய :


  3.  பாச  வஜ்ர   தரம்  தேவம்   வரதாபய   பாணிநம்   

       அப்ராரூடம்   ஸ   ஸர்வேஷம்   வ்ருஷ்யட்ர்த்தம்   ப்ரணாமாம்யஹம்!


  4.  யஸ்ய   கேசேஷு   ஜீமுத :   நத்ய :   ஸர்வாங்க   சந்திக்ஷூ 

       குசெளவ்   சமுத்ரா :  சத்வார :   தஸ்மை  தோயத்மானே  நம :

       
  5.  புஷ்கலா வர்த்தகை :  மேகை :  ப்லாவயந்தம்    வஸூந்த்ராம் 

       வித்யுத்   கர்ஜன   ஸம்வாதம்   தோயத்மானம்   நமாம்யஹம் !!


ஆஹ்வானம் :

      ஆயாது   வருண :   சீக்ரம்    ப்ராணினாம்   ப்ராணரக்ஷக :

      அதுல்ய   பலவாநத்ர   ஸர்வ வஸ்யாபிவ்ருத்தயே 

      ருஷ்ய  ஸ்ருங்காய  முனையே  வியண்டக   ஸுதாய  ச 

      நம :  சாந்தாதிபதயே   ஸத் யஸ்ஸத்வ்ருஷ்ட்டி ஹேதவே

      விபண்டக   ஸூதக :    ஸ்ரீமான்   சாந்தாதிபதி  (அ) கல்ம 

      ரிஷ்ய  ஸ்ருங்க   இதிக்  யாதமஹா வர்ஷம்  ப்ரயச்சது :மேற்கண்ட  மந்த்ரத்தில்  .......  வருணனே !  இங்கு  எழுந்தருளி  நல்ல  விருட்சங்களும் ,  நல்ல .....வீரியமிக்க  தாவர, விலங்கு , பறவைகள் உற்பத்தியாகி ...... அனைத்தும்  இன்புறவும் ,  ரிஷ்ய  ஷிருங்கர், விபண்டகர், வியாசர் , சூதர் , அகஸ்தியர்   முதலான  முனிவர்கள்  அழைப்பிற்கும்  வந்து  அருளியவரே .....

நல்ல  விருஷ்டிகளை  அருளி ....இந்த  பூமி  செழிப்புற ....சகல  பிராணிகளின்  ப்ராணனை   ரட்ஷிக்கும்  வண்ணம்  எழுந்தருளி ....சர்வத்திலும்  உயிரினங்கள்   வாழ  அவசியமான  விருஷ்டிகளை   விளைவித்து  எங்கும்  அமைதியும் , சாந்தியும்  நிலவ.........ரிஷ்ய  ஷிருங்கர்  போன்ற  மஹா  புருஷர்களின் அன்பிற்கு  பாத்திரமாய்  பொழிந்ததும் ......அவர்கள்  வாழ்ந்த   பூமியில்  வாழ்கிறோம்  என்பதை  தவிர,  ஒரு தகுதியும்  இல்லாத    எங்களின்  எல்லாக்   குற்றங்களையும்  பொறுத்து  நல்ல  மழை   வர்ஷிக்கட்டும் !  என  தியானிக்கின்றோம்.


Related image
       
     

     ஓம்  நமோ  பகவதே  வம்  வருணாய   ஜலாதிபதயே 

     மகரவாஹனாய    மேகவர்ணாய   பாசஹஸ்தாய 

     ஸர்வான்   மேகான்   ஆகர்ஷ   ஆகர்ஷ     முஞ்சமுஞ்ச

     சீக்ரம்   மஹா  வர்ஷம்   ஸ்ராவய   ஸ்ராவய

     ஏஹி இந்திர  ஏஹி வருண  ஏஹி ரிஷ்ய  ஸ்ருங்க 

     ஏஹி அகஸ்திய    ஏஹி பர்ஜன்ய  ஏஹ்யயாம்பதே 

    ப்ரோவாதம்  ஜனய  ஜனய   பஸ்சாத்வாதம்   ப்ராமாபய   ப்ராமாபய

    ஏதே  நவக்ரஹா :   ஸத்ய :   ஸர்பூர்ணா :

    ஸுவ்ருஷ்டிம்   தேஹி   பர்ஜன்யோம் !!இத்துடன்  முடிந்தால்  வருண  ஸூக்தம்   பாராயணம்  செய்திடலாம்.Image result for krishna images at rainy
    

நன்றி!  ...ஆக்கத்தில்  உதவி :

மணிராஜ் - ஸ்ரீ ராஜராஜேஸ்வரி  அம்மா!  அவர்கள்  blog, (இப்பதிவு  அவர்களுக்கே   சமர்ப்பணம் )

ஸ்ரீ  நடராஜ  குருக்கள் ,

Tamil  bramins.


No comments:

Post a Comment