உத்தம பிஷை :
அது ஒரு கோடைகாலம், 1995-ம் ஆண்டு மே -மாதம்,
ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு இருந்தபோது நண்பர்களாகிய சிவபெருமானின் அடியவர்கள் 13 பேர் சேர்ந்து பஞ்ச பூத ஸ்தல பாத யாத்திரையை இளைஞர்கள் திருநணா என்னும் பவானி தலத்திலிருந்து தொடங்கினோம். பவானியில் ஆரம்பித்து, 1. திருஅண்ணாமலை , 2. காஞ்சிபுரம் , திருப்பதி வழியாக 3. காளஹஸ்தி, சென்னை ,பாண்டி -கடலூர் வழியாக 4.சிதம்பரம், மாயவரம் , கும்பகோணம் ,தஞ்சை வழியாக திருச்சி -5. திருஆனைக்கா, கரூர் வழியாக மீண்டும் பவானியில் பாதயாத்திரை நிறைவுபெற்றது.
தினசரி 40km. நடந்து முடிப்போம்...இவ்வாறாக சுமார் 46 நாட்கள் பாத யாத்திரை எம்பெருமானின் கருணையினால் நிகழ்ந்தது. எண்ணில் அடங்கா அனுபவங்கள்...............பக்குவங்கள் கிடைத்தன. ஒரு 2 குயர் நோட்டு வாங்கிக்கொடுத்து, ஒரு பெண் அடியவர் தங்களின் எல்லா அனுபவங்களையும் எழுதிக்கொடுங்கள் என்றார். சரி, என்று தினசரி ஓய்வு எடுக்கும் நேரத்தில் சிரத்தையாக எழுதி வந்தோம். ஆனால் இறைவனின் விருப்பம் வேறுவிதமாக இருந்தது. ஆம் , புயலால் சென்னை செங்கல்பட்டு , விழுப்புரம் வரை தொப்பலாக தொடர்ந்து மூன்று நாட்கள் 10 to 12 மணிநேரம் மழையில் நனைந்தால் நோட் நீரில் ஊறி பயன்படுத்தமுடியாதபடி ஆகின. நீரினில் ஊறிய பிணம் போன்று எங்கள் எல்லோரின் நிலையும் இருந்தது. கைவிரல் தோல்கள் எல்லாம் நீரில் தொடர்ந்து ஊறியதில் உரிந்து வரும் அளவுக்கு மாறியிருந்தன. ஆனால் ஒருவருக்கும் சிறு சளியோ , காய்ச்சலோ இல்லை.
தினமும் காலையும் , மாலையும் பாராயணம் உண்டு. ஓரிரு நாட்களில் பேச்சுக்கள் குறைந்து, மானசீக " பஞ்சாட்சர " ஜபம் மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கும். வேறு எதுவும் எண்ண முடியாது .......கால்களில் தோல்கள் உரிந்து ......மீண்டும் மீண்டும் நடப்பதால் ( தார்ரோட்டில் .....மேமாதம் )..........கீழே இறங்கி மண்பகுதியில் நடந்தால் ................சிறு ,சிறு மணல் துகளும், சிறு கற்களும் தோலுரிந்த கால்களில் பட்டு.............உச்சந்தலையில் சுள்ளென்ற வலியில் ............நடக்கும்போது ...........
வேறு வழியே இல்லை !........" பஞ்சாட்சர " ஜபம் கண்டிப்பாக ஒவ்வொரு அடிக்கும் உள்ளே நிகழும். இப்படித்தான் தொடர்ந்து பஞ்சாட்சர ஜபம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது.
எத்தனையோ அனுபவங்கள் இருந்தாலும் , ஒரூ அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். ஆந்திராவில் நக்ஸல் பிரச்சனை உள்ள அடர்ந்த காடுகளில் நடந்தது. ரோந்து வந்த DSP அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி எங்களை நிறுத்தி, எங்களின் யாத்திரை பற்றி விசாரித்து மிகக் கடுமையாக (பாதுக்காப்பு கருதி அக்கறையோடு ) திட்டியது ......( நாங்கள் எல்லோரும் இளைஞர்கள்.... 10, 12ம் வகுப்பு முடித்த மாணவர்களும் எங்களுடன் ) பின்னர் அவரது காவல் எல்லைவரை பாதுகாப்பு அளிக்கச்செய்து , தங்குவதற்கு பள்ளிக்கூடங்களில் ஏற்பாடு செய்து......முடிவில் எங்களின் யாத்திரை நோக்கத்தினை புரிந்ததால் தனது குழந்தைகள் , குடும்பத்திற்காக பிரார்த்தித்து ........எங்கள் எல்லோரின் கைகளாலும் விபூதியினை பெற்றுக்கொண்டு சென்றது .............................என எண்ணிலடங்கா அனுபவங்களுக்கிடையே கீழ்கண்ட அனுபவம் மறக்கமுடியாது.
மாலைநேரம் அது ........ பவானியிலிருந்து திருவண்ணாமலை சென்றபோது, அரூர் - தீர்த்தமலை வழியாக சென்றபோது மலைகளை ஒட்டிய ஒரு குக்கிராமம் நெருங்கினோம்....இரண்டு இரண்டு பேராக சென்றோம். கடைசியாக சென்ற நால்வரில் இவனும் ஒருவன். அப்போது எங்கள் நண்பர் ஒருவருக்கு சிறிதே மயக்கம் , சோர்வு ஏற்பட்டதால் சாலை ஓரம் அமர்ந்து , மற்றவர்களை அடுத்துவரும் கிராம எல்லையில் அனைவரும் சாப்பிட்டு ... காத்திருக்க சொல்லி அனுப்பிவிட்டு ....இவருக்கு அருகே ஒருவரும் .....மற்ற நாங்கள் இருவரும் அவருக்கு ஏதேனும் அருந்துவதற்கு ஏற்பாடு செய்யலாம் என்று நினைத்து அருகிலிருந்த ஒரு ஏழைக் குடிசையினை அணுகினோம். மலை, மாலைநேரம்,..... வயலை ஒட்டிய சாலை ....நாள்முழுதும் போக்குவரத்து அரிதான சாலை அது. ஒரு குடிசையின் வாசலில் ஒரு தாய் பிறந்த சில நாட்களே ஆன குழந்தையினை வைத்து சோகத்தோடு அமர்ந்திருந்தார்.
எங்களை பார்த்ததும் அவருக்கு சிறிது மகிழ்ச்சி,....எங்களின் யாத்திரை அறிந்ததும் ....சோர்வோடு இருந்த நண்பருக்கு வெளியே கட்டிலை போட்டுவிட்டு அவரை அழைத்துவந்து ஓய்வு எடுக்கும்படி பணித்து விட்டு ....வந்துவிடுவதாக கூறிவிட்டு குழந்தையை சற்றே பார்த்துகொள்ள சொல்லிவிட்டு வெளியே சென்றார்.........குழந்தை .........உறங்கிக்கொண்டு இருந்தது....அவர்
சென்று ........அருகிலிருந்த வீட்டில் அரிசி வாங்கிவந்து கஞ்சி வைத்து அடியவருக்கு கொடுத்தார். கணவர் வடநாட்டுக்கு சென்றுள்ளார் ....லாரி ஓட்டுநர் ....வறுமை .....அந்த அம்மா காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார் .........
என்னிடம் கஞ்சிதான் இருக்கு .........குடிப்பீங்களா ? என்றார். நண்பரின் நிலையோ ரொம்பவும் மோசம். எது கிடைத்தாலும் ஈஸ்வர கருணை ...............ஏனெனில் அன்று வழியில் கிணறு ஒன்றில் குளித்து, (கிணற்றில் நன்கு ஆட்டம் போட்டனர் ) துவைத்தத்தில் வெயில் காலம் ........மதிய உணவு ஏற்பாடு செய்வதற்குள் வெய்யிலில் மாட்டிக்கொண்டோம்.
சாப்பிடவில்லை ........வெயிலில் நடந்து , குளித்து , துவைத்து வந்ததால், பசி ........ஆம் அந்த பசியில் அந்த அன்னை யிட்ட பிக்ஷை கஞ்சி ..................அமிர்தம் போன்றது ............அதுபோன்ற சுவையும் , திருப்தியும் அதன்பின்பு இன்று வரை எந்த உணவிலும் கிடைக்கவில்லை ......பல்வேறு ஆசிரமங்களில் சாப்பிட்டு இருந்தாலும் அன்று .....தான் பசியோடு இருந்தும் .........பாதயாத்திரை செல்லும் அடியவர்கள் என்று .........( அவரின் தந்தை இரவு வந்து அரிசி தரும் வரை ) பசியோடு இருந்தும் பிச்சையாக அருகில் இருந்த வீடுகளில் அரிசி வாங்கிவந்து அன்னம் பாலிட்ட அன்னையின் கண்களில் திரண்டிருந்த நீரை இன்னும் மறக்கமுடியவில்லை. பின்னர் விசாரித்து தெரிந்ததில் அவரும் சாப்பிடாமல் அன்பர்களுக்கு அன்னமிட்டபின்பே அவரும் மீதிகஞ்சியை அருந்தினார்.
17 -நாட்களே ஆன குழந்தையை எங்கள் கைகளில் கொடுத்து ஆசீர்வதிக்கவேண்டி ...........அவனுக்கு (ஆண்குழந்தை ) பெயரிட வேண்டினார். அவர் எங்களுக்காக பிச்சையெடுத்து வந்துள்ளார் என அருகிலிருந்து வந்தவர் சொல்ல ...........எங்களுக்குள் நெகிழ்ச்சி .................
பாராயணம் செய்து ......தேவாரப் பதிகங்களும் பாடி .........அக்குழந்தைக்கு " திருஞானசம்பந்தம் " எனப் பெயரிட்டபோது அவரின் தந்தையும் வந்து சேர்ந்தார். எளிமையான தேவாரப் பதிகம் அளித்து ........ ' பஞ்சாட்சரம் ' தினசரி கூறுங்கள் ,......வாழ்க்கை சூழல் மாறும் எனக் கூறி அண்ணாமலையரிடம் பிரார்த்திப்பதாக கூறி அவ்விடம் விட்டு நடந்தோம்.
ரமண பகவானின் மலை வாசம் செய்த ஆதி நாட்களில் , எளிய ஏழைமக்கள் அளித்த கஞ்சி மற்றும் தமது அண்ணாமலை முதல் பிஷை பற்றிய நினைவுகள் நண்பருடன் பேசியபோது, எங்களின்
மறக்க முடியாத இந்த பிஷை அனுபவத்தை இருவரும் பகிர்ந்துகொண்டோம்.

No comments:
Post a Comment