Tuesday, October 7, 2014

மஹா பெரியவாளின்  உபதேசங்கள் 2: 

फ़ोटो: பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழு மனிதனாக ஆக முடியாது. ‘நமக்கு எல்லாம் தெரியும், நாம் புத்திசாலி’ என்ற அகம்பாவம்தான் வெறும் படிப்பினால் உண்டாகும். இப்படிப்பட்டவர்களுக்குப் பகவான் துணை புரியமாட்டார். பகவானின் அநுக்கிரகம் இல்லாமல் எத்தனை புத்திசாலியாலும் வாழ்க்கையில் சந்தோஷம் பெறமுடியாது - ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா

மறுபிறவி 

    இந்த  சரீரம்  போனால்  இன்னொரு  சரீரம்  வரக்கூடாது.  அப்படிச்  செய்து கொள்ளவேண்டும். கட்டுப்பாடு , ஒழுங்கு , பரமகருணை , தபஸ் , பூஜை , யங்ஞம், தானம் , தர்மம் , சேவை  எல்லாம்  அதற்குத் தான் .

    இந்த  ஜன்மா  முடிகிறபோது  " அப்பாடா !   பிறவி  எடுத்ததின்  பலனை  அடைந்துவிட்டோம் , இனி  பயமில்லாமல்  போய்ச்சேரலாம் "  என்ற  உறுதியும்,  திருப்தியும்  பெறுகிற  அளவுக்கு  நல்ல  மார்க்கத்தில்  நாம்  செல்லவேண்டும் .

     காமம் ( ஆசை ), கோபம்  என்று  இருக்கிற  வரைக்கும் உடம்பு  (மறுபிறப்பு ) வந்துகொண்டே தான்  இருக்கும். ஆகவே  உடம்பு  கூடாது  என்றால்  காமம், கோபம்  எல்லாம்  போகவேண்டும்.

    நாம்  பண்ணுகிற  பாவம்  தான்  உடம்புக்கு  ( பிறப்புக்கு )  காரணம் .  இனிமேல்   பாவம்  பண்ணாமல்  இருந்தால்  உடம்பு  வராது.

  " பாவம்  பண்ணக்கூடாது "  என்ற  நினைப்பு  தினமும்  இருக்கவேண்டும்.

    நம்முடைய  கர்மா , ஜன்மா  எல்லாவற்றுக்கும்  காரணம்  மனசின்  சேஷ்டை தான் . இந்த  மனசை  வைத்துக்கொண்டு,  அதனுடைய  இச்சைகளை  பூர்த்தி பண்ணப்   பாடுபடுவதில்தான்  பாவங்கள்  சம்பவிக்கின்றன. ஜன்மாக்கள்  ஏற்படுகின்றன.

   மனசை  நிறுத்திவிட்டால்  கர்மா   இல்லை,  ஜன்மா  இல்லை ,  பிறகு  மோட்ஷம்  தான்.

   " ஒருஜன்மாவில்  இவன் பண்ணின  பாவங்களை  இன்னொரு  ஜன்மாவிலாவது  தீர்த்துக்கொள்ளட்டும் "  என்கிற  மகா  கருணையில் தான்  ஈஸ்வரன்  மறுபடி  ஜன்மா  தருகிறார்.




No comments:

Post a Comment