Wednesday, October 8, 2014

மஹா பெரியவாளின்  உபதேசங்கள் 3:


                  சரீரம் 

       தண்டமான  ( உதவாத )  வஸ்துதான்   நம்  சரீரம் (உடல் ).

     இதைத்  தூக்கிப்  பிடித்து  நிறுத்தி  வைத்து  ஆட்டுகிற  சக்தி  ஈஸ்வரன்  கொடுத்ததே  ஆகும் .

    இந்த  உடம்பை  ஏதோ  நாமே  தாங்கி  நடத்துகிறோம்  என்ற  எண்ணத்தை  ஒழித்துவிட்டு,  அதாவது  அஹங்காரத்தை  விலக்கிவிட்டு, அதற்கு  அடையாளமாக  ஈஸ்வரன்  முன்பு  இந்த  சரீரத்தை  கீழே  போடவேண்டும்.அதுதான்  தண்டம்  சமர்ப்பிப்பது ........நமஸ்காரம்  செய்வது.

     ஸ்வாமியின்  முன்   தண்டாகாரமாக  விழுந்து  நமஸ்கரிக்க  வேண்டும்.
                                                       ********
    
     நம்முடைய  நல்லது , பொல்லாதது  அவ்வளவும்  அவர்  விட்டபடியே  என்று  சகல  பொறுப்புகளையும்  அவரிடம்  தள்ளுவதற்கு  வெளி  அடையாளமாக  உடம்பைத்  தரையில்  தள்ளி  நமஸ்காரம்  பண்ண  வேண்டும் .

    அப்படிச்  செய்தால்  நம்  பாரம்  அனைத்தும்  கிருபா  சமுத்திரமான  ஸ்வாமியே  ஏற்று  அனுக்கிரகிப்பார்.

                                                ***************

     பல  வாய்க்கால்களில்  ஒன்றில் ஜலத்தை  அடித்துத்  திருப்பினால்  இன்னொன்றில்  அதிகம்  நீர்  பெருகும்.

    அதுபோல,  ஓர் அங்கத்தில்  ஊனம்  இருப்பதே  இன்னொன்றில்  தீட்சண்யத்தைத்  தருகிறது.
                                           ***********************

     எந்த  உடம்பு  நோய்  வந்தாலும்,  அடிபட்டாலும், காயம்  பட்டாலும்  ஒவ்வொன்றையும்   ஒரு  தபஸாக,  நாமாக  பண்ணாத  போதிலும்  பகவானே  அனுப்பி  வைத்திருகின்ற   தபஸாக  - எடுத்துக்கொள்ளவேண்டும்.

     பழக  பழக  இந்த  மனோபாவம்  உறுதியாக  ஏற்பட்டுவிடும். இதனால் நோய்நொடியைத்  தாங்கிக்கொள்கின்ற  சக்தி  உண்டாகும்.
                                          ****************************

      நம்  சரீரத்துக்கு  எந்த  வியாதி  வந்தாலும், எந்தக்  கஷ்டம்  ஏற்பட்டாலும், நிரம்ப  வறுமையினாலே  சிரமப்பட்டாலும்,  " இவையெல்லாம்  நமக்கு  வைராக்கியத்தைக்  கொடுப்பதற்குச்  சுவாமியினாலே  கொடுக்கப்பட்டவை. இவை  எல்லாம்  தபஸ் " என்று  நினைத்துக் கொள்ளவேண்டும்.

   தினந்தோறும்  மூன்று வேளையும்  ரோகிஷ்டன்  ( நோயாளி ) கூட  பிரணாயாமம்  பண்ண வேண்டும்  என்று  சாஸ்ரத்தில்  இருப்பதால்,  உபத்திரவம்  கொடுக்கும்  அளவுக்கு  இதில்  சுவாஸக்கட்டுப்பாடு  இல்லை.

     மூச்சை  கொஞ்சம்  நிறுத்துகிறது, பின்பு  விடுகிறது  என்ற  அளவில்  இருந்தாலே  போதும். அரை  நிமிடம்  சுவாஸத்தை  நிற்கப் பண்ண  வேண்டும். அதிகமாக  வேண்டாம்.

     வேத பாராயணம், மந்திர ஜபம், அத்யாயனம்  போன்றவற்றில்  ஈடுபடுதல்  இயற்கையாகவே  அவற்றின்  உச்சரிப்பு  ஓசையில் ,  ஒரு  வித  லயத்தில்  மூச்சு  நின்று    பிராணாயாமம்  நடைபெறும்.

     இப்படி  பண்ணினாலே  ரோஹமும் (வியாதி ) போய்,  தீர்க்காயுள்  உண்டாகும்.


No comments:

Post a Comment