மஹா பெரியவாளின் உபதேசங்கள் 5:
சித்த சுத்தி
சித்தம் ஓடிக் கொண்டே இருப்பதால்தான் இன்ப , துன்ப அனுபவங்கள் ஏற்படுகின்றன. சித்தம் சஞ்சலிக்காமல் நிறுத்திவிட்டால் அவை இல்லை.
ஒரே முனையை விட்டு அகலாமல் - ஏகாக்கிரகம் என்று சொல்வார்கள், இருக்கச் சித்தத்தைப் பழக்குவதே சித்த சுத்தி ஆகும்.
*********************
சரீரக் கைங்கரியம் உடம்புக்கே ஒரு நல்ல Exercise ( அப்பியாஸம் ). அதோடு பரோபகாரமாகப் பண்ணுகிறபோது மனசுக்கும் அலாதியான உற்சாகம் இருக்கும். முடிவில் சித்த சுத்தி தரும்.
எளிமையும், உழைப்பும்தான் திருப்தி தருவது, அதுவே சித்த சுத்தியை தருவதும் ஆகும்.
சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது, உதவியைப் பெறுகிறவனைவிட, உதவியைச் செய்கிறவனின் சித்த சுத்திக்கே அதிகம் உதவும்.
***************
வெளியே சுத்தமாக, தூய்மையாக, ஆச்சாரமாக இருந்தால் அதுவே
உள் தூய்மைக்கும் உபகாரமாகம் செய்யும்.
நீராடுவது, மற்றபடி ஆச்சாரங்கள் சௌசத்தின் கீழே வரும். " சௌசம் "
என்பது " சுசி " என்பதிலிருந்து வந்தது. " சுசி " என்றால் " சுத்தம் ".
ஸ்நானம், மடிவஸ்திரம், ஆஹார நிர்ணயம் முதலான ஆச்சாரங்கள்
எல்லாம் " சௌசம் " என்பதில் வரும்.
" சுத்தம் சுகம் தரும் : சுத்தம் சோறு போடும் " என்று பாமர
ஜனங்களும் சொல்வார்களே!........இதில் சித்த சுத்தியையும் சேர்த்துதான்
அர்த்தம் கொள்ளவேண்டும்.
*********************
பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம்
பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்துப்
பண்ணுகிறேன் என்று சொல்கிறோம்.
காயத்ரீ மந்திரத்தின் பலன் சித்த சுத்திதான் : மனமாசு
அகலுவதுதான்.
மற்ற மந்திரங்களால் உண்டாகின்ற பலனெல்லாம் கடைசியில்
சித்த சுத்தி உண்டாக்கத்தான் இருக்கின்றன. அதுவே காயத்ரீக்கு நேரான
பலன் ; ஒரே பலன்.
**********************
பணம் சம்பாதிக்கிறாயா ? சம்பாதித்து விட்டுப் போ. ஆனால் அதை
தார்மீகமாகப் பிரயோஜனப்படுத்தியானால் அதுவே உன் சித்த சுத்தியை
பரிசுத்தி பண்ண உதவும்.
மனசு சுத்தம், டிசிபிளின் இல்லாமல் வராது. உன் டிசிபிளின்
வெளி டிசிபிளின் இல்லாமல் வராது.
ரூல்களும், ஃ பார்மாலிடிகளும், வெளிக் காரியங்களும், அந்தக்
காரியங்களைப் பொறுத்தே அநேக வித்தியாசங்களும் இல்லாமல் வெளி
டிசிபிளின் இல்லவே இல்லை.
********************
காரியம், ஓயாத உழைப்பு இல்லாமல் சித்த சுத்தி ஸாத்தியமே
இல்லை. நெறி இல்லாமல் செய்வதாலேயே ஆசையும், அழுக்கும்
அதிகமாகின்றன. அதையே நெறியோடு செய்தால் சாந்தியும், சித்த
சுத்தியும் ஏற்பட ஆரம்பிக்கின்றன.
அஹங்காரம், மாதிரியே பயம், தாழ்வுணர்ச்சி, சந்தேகம் போன்ற
அழுக்குகள். இவை இருக்கிற வரையில் சித்தம் சுத்தமாகாது.

No comments:
Post a Comment