சரணாகதி - ஸ்வாமி ராமதாஸ்
சமீபத்தில் " கடவுள் திருவடிகளில் " ( AT THE FEET OF GOD ) என்ற ஸ்வாமி ராமதாஸ் எழுதிய நூலில் --சரணாகதி பற்றி அவர் ராமனிடம் , கேட்டதும் அதற்கு ராமனே அந்தர்யாமியாக பதில் தந்ததும் ............மிக அற்புதமான, திரும்பத் திரும்பப் படித்து சத்சங்கத்திற்கு உதவும் புத்தகம். ஆனந்தாஸ்ரம வெளியீடு. M.O. அல்லது Postal லில் பெற்று,
நீங்களும் படித்து பயன் பெற எல்லாம் வல்ல அந்த ஒன்றையே பணிந்து வேண்டுகிறோம்.
கேள்வி : சரணாகதி என்பது என்ன ?
கே : ஆனால் சந்தேகங்கள் எழுகின்றனவே, அவற்றை எப்படித் தவிர்ப்பது ?
கே : உடல் பற்றிய உணர்வைக் கடந்த நிலையை எப்படி
கே : உடலின் அசைவுகளும் , செயல்பாடுகளும் அதன்பின்பு எப்படி நிகழ்கின்றன ?
&&&&&&&&&&&&&
மேற்கண்ட புத்தகம் பெற அஞ்சல் முகவரி:
ஆனந்தாஸ்ரமம்
ஆனந்தாஸ்ரமம் ( P.O.),
காஞ்சன்காடு -671531,
காசர்கோடு மாவட்டம்,
கேரளா , இந்தியா.
Tel: (0467) 2203036/ 2209477
மின்னஞ்சல்: anandashram@gmail.com
Anandashram
Anandashram P.O.,
Kanhangad 671531
Dist. Kasaragod,
kerala
India.
Tel: (0467) 2203036/ 2209477
Email: anandashram@gmail.com
சமீபத்தில் " கடவுள் திருவடிகளில் " ( AT THE FEET OF GOD ) என்ற ஸ்வாமி ராமதாஸ் எழுதிய நூலில் --சரணாகதி பற்றி அவர் ராமனிடம் , கேட்டதும் அதற்கு ராமனே அந்தர்யாமியாக பதில் தந்ததும் ............மிக அற்புதமான, திரும்பத் திரும்பப் படித்து சத்சங்கத்திற்கு உதவும் புத்தகம். ஆனந்தாஸ்ரம வெளியீடு. M.O. அல்லது Postal லில் பெற்று,
நீங்களும் படித்து பயன் பெற எல்லாம் வல்ல அந்த ஒன்றையே பணிந்து வேண்டுகிறோம்.
கேள்வி : சரணாகதி என்பது என்ன ?
விடை: இறைவனின் சித்தத்திற்கு முழுமையாகவும், தயக்கமின்றியும்
பணிதலே சரணாகதி ஆகும்.
கே : இதை எப்படி அடைவது ?
வி : ஒரே தீர்மானமாக இறைவனின் சித்தமே உண்மை. அது
மட்டுமே உண்மை என்று உணர்ந்துகொள். அந்த சித்தம் தான்
தூண்டுகிறது; செயல்படச் செய்கிறது ; வழிகாட்டுகிறது ; இட்டுச்செல்கிறது; உலகின் எல்லா உயிர்களிலும், ஜீவராசிகளிலும், பொருட்களிலும் பணியாற்றுகிறது. உன்னுடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள், யாவும் உன்னுள்ளே வசிக்கும் , முழுவதும் ஊடுருவியிருக்கும் தெய்வீக சக்தியின் எண்ணங்கள், சொற்கள் , செயல்களே ஆகும். நீ எப்பொழுதும் அந்த நன்மை பயக்கும், சதா செயல்படும், எல்லோரையும், எல்லாவற்றையும் நேசிக்கும், சகல சக்தியும் படைத்த, அழியா சக்தியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறாய் என்று தெரிந்துகொள்.
கே : ஆனால் சந்தேகங்கள் எழுகின்றனவே, அவற்றை எப்படித் தவிர்ப்பது ?
வி : சந்தேகங்கள் சரணாகதி முழுமையாக இல்லை என்பதைக் குறிக்கின்றன. அவற்றை நீ விட்டுவிட வேண்டும். உடல் பற்றிய உணர்வைக் கடந்தாயானால் உன் சந்தேகங்கள் மறைந்துவிடும். இந்த நிலையில் நடக்கும்போதும், கனவிலும் ,
உறக்கம் கொள்ளும் நிலையிலும் எப்போதும் தொடர்ந்திரு.
கே : உடல் பற்றிய உணர்வைக் கடந்த நிலையை எப்படி
அடைவது ?
வி : என்றும் சாசுவதமான, உருவமற்ற, ஒன்றான, ஒரே மெய்ப்பொருளான ஸ்ரீ ராமன் மீது உன் மனதை எப்பொழுதும் ஈடுபடுத்துவதன் மூலம்....
கே : உடலின் அசைவுகளும் , செயல்பாடுகளும் அதன்பின்பு எப்படி நிகழ்கின்றன ?
வி : அதன்பின்பு உடலின் அசைவுகளும் , செயல்பாடுகளும் மனம் அவற்றைக் கவனிக்காத நிலையில் தன்னிச்சையாக நிகழ்கின்றன. மனம் அவற்றைத் திட்டமிடுவதும் இல்லை. கணக்கிடுவதும் இல்லை. அப்போது செயல்கள் மனதை பாதிப்பதுமில்லை. தளையிடப்பட்ட மனதில் ஏற்படும் படிமங்கள் சந்தேகங்களை எழுப்புகின்றன. மனம் தன்னுடைய சுதந்திரம் , தூய்மை , அமைதி , பேரானந்தம் ஆகியவற்றை
ஸ்ரீ ராமனிடம் காணட்டும்.
கே : அப்படியானால் இறைவனின் சித்தம் எப்படிச் செயல்பட முடியும் ?
கே : அப்படியானால் இறைவனின் சித்தம் எப்படிச் செயல்பட முடியும் ?
வி : நீ எப்பொழுதும் ஒரே ஒருமுகப்பட்ட , இல்லை, போதையூட்டும் நிலையில் ஸ்ரீ ராமனின் நினைவிலேயே திளைத்தால் , உன்னுடைய செயல்கள் யாவும் ஒரு தூய ஒற்றுமை நிலையை அடைகின்றன. அப்பொழுதுதான் ஸ்ரீ ராமனின் தெய்வீக சித்தம் உன்னிடம் செயல்படுகிறது. இப்பொழுது அவனுடைய சித்தத்தை நீ எதிர்ப்பதில்லை. நீ அவனுடன் தூய இணக்கம் கொண்டு விளங்குகிறாய். அவன் எப்பொழுதும் தூய்மையாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறான். அதனால் உன் செயல்கள் , சொற்கள் , எண்ணங்கள் யாவும் தூய்மையும், ஒற்றுமை நிலையையும் அடைகின்றன. இப்பொழுது உன் சரணாகதி பூரணத்துவம் அடைந்துவிட்டது.
கே : தூய சரணாகதிக்கு முதலிலும், இறுதியுமாக எது அவசியம் ?
வி : ஸ்ரீ ராமனுடைய சித்தத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை. இதற்குக் குறைந்த எதுவும் போதாது. அவனிடம் முழுமையாகப் புகலடைந்துவிடு. எல்லாவித அச்சம் , கவலை , சந்தேகங்கள் , பலவீனமான எண்ணங்கள் அனைத்தையும் விட்டுவிடு. உன்னை சர்வ வல்லமை படைத்த ஒருவனின் வழிகாட்டலுக்கும், கட்டுப்பாட்டிற்கும் நீ உட்படுத்திக்கொண்டு விட்டாய். அவன் உன்னைத் தன் விருப்பப்படி நடத்தட்டும். " நான் " , " எனது " என்ற உணர்வுகளை விட்டுவிடு. திட்டங்கள் ஏதும் போடாதே. கடந்தகாலம் , எதிர்காலம் தொடர்பான எதுவும் உன்னை பாதிக்க விடாதே. ஸ்ரீ ராமன் மட்டுமே செயல்படுபவன். நீ அவனுடைய குழந்தை ; அவனுடைய பணியாள் . இங்கு உனது
" நான் ", " எனது " ஆகியவற்றுக்கு இடமில்லை. எல்லாம் அவன்தான் ; அவன் மட்டும்தான். அவனிடம் கீழ்படிந்து, அவனே கதி என்று எண்ணி, சரணடைந்துவிடு. எப்பொழுதும் சந்தோஷமாக, அமைதியாக, ஆனந்தமாக இரு. இந்த நிலையில் நீ எப்பொழுதும் இருக்கவேண்டும். இதுதான் உனது இலட்சியம். ஸ்ரீ ராமன் எப்பொழுதும் உன்னிடம் இருக்கிறான் ; நீ எப்பொழுதும் அவனிடம் இருக்கிறாய். அவனும் நீயும் ஒன்று. இதுதான் பேருண்மை.
மேற்கண்ட புத்தகம் பெற அஞ்சல் முகவரி:
ஆனந்தாஸ்ரமம்
ஆனந்தாஸ்ரமம் ( P.O.),
காஞ்சன்காடு -671531,
காசர்கோடு மாவட்டம்,
கேரளா , இந்தியா.
Tel: (0467) 2203036/ 2209477
மின்னஞ்சல்: anandashram@gmail.com
Anandashram
Anandashram P.O.,
Kanhangad 671531
Dist. Kasaragod,
kerala
India.
Tel: (0467) 2203036/ 2209477
Email: anandashram@gmail.com
No comments:
Post a Comment