Wednesday, October 8, 2014

கொடுத்தவரே  எடுத்துகொண்டார் :


       இறை  நம்பிக்கை   ஆறுதல்  அளிக்காவிட்டால் 
          தற்கொலையே  நல்லது  என்று 
          நினைத்து  விடுகிறது   இன்றைய    உலகம்.

          ஆனால்   எத்தனையோ   சோதனைகளுக்கு                        உள்ளாகியும்,  தாங்கள்   கடவுளால் 
           கைவிடப்படவில்லை   என்பதை  உணர்கின்ற 
           பலர்   இருக்கின்றனர்.


     பக்திமிக்க   ப்ரவசனம்  செய்யும்  ஒருவர்   வெளியூர்  சென்று  இருந்தார்.  அப்போது  அவருடைய   பிள்ளைகள்   மூவரும்   திடீரென்று   காலரா  கண்டு  இறந்துவிட்டனர்.

         அவனுடைய  மனைவி   ஆசைக்  குழந்தைகள்   மூவரையும்  ஒரு  துணியால்  போர்த்திவிட்டு ,  கணவனின்   வருகைக்காக  வாசலில்  காத்து  இருந்தாள் .

          கணவன்  வந்ததும்,  அவனை   வாசலிலேயே   நிறுத்தி, " என்  அன்பே !  ஒருவர்   ஒரு  பொருளை   உங்களிடம்   ஒப்படைக்கிறார்.  நீங்கள்  வெளியே   சென்றிருக்கும்போது   திடீரென்று  அதைத்  திருப்பி  எடுத்துச்  செல்கிறார்.  அதற்காக   நீங்கள்   வருந்துவீர்களா ? "   என்று   கேட்டாள்.

       "  நிச்சயமாக   வருந்த   மாட்டேன் ! " என்றான்   அவன்.

           உடனே   அவள்   அவனை   வீட்டின்  உள்ளே  அழைத்துச்  சென்று, போர்வையை   நீக்கிப்  பிள்ளைகள்  மூவரின்   பிணத்தைக்   காட்டினாள். அமைதியாகப்   பிணங்களைப்   பார்த்த   அவன்   உடல்களை   நல்லடக்கம்  செய்தான் .

       நடப்பவை   எல்லாம்   கருணைக்  கடலாகிய   ஆண்டவனின்   செயலே  என்று   உறுதியாக   நம்புவர்களின்   மனநிலை   இத்தகையது.

No comments:

Post a Comment