Thursday, October 9, 2014

கண்ணன்  போட்ட  கணக்கு:
               
        மகாபாரத  யுத்தம்  ஒவ்வொரு  நாளும்  முடிந்து  பிறகு  அன்று  மாலை  கௌரவர்கள்  மற்றும்  பாண்டவர்கள்  ஆகிய  இரு  தரப்பு   படை வீரர்களும்  ஒன்றாகவே  அமர்ந்து  உணவு  உண்பார்கள்.

( எவ்வளவு  நேர்மை , இன்றைக்கு  ஒரு  போர்  என்றால்   இதை   நினைத்துப்  பார்க்க கூட  முடியாதே ---பாகிஸ்தானின்   கபடங்கள்,   சீனாவின்  அநாகரிகமான    ஆக்கிரமிப்பு ..... எங்கே  உள்ளோம் ,  இறைவா ! )

               
              அத்தனை  பேர்களுக்கும்  தேவையான  உணவு  மிகச்  சரியான  அளவில்  தயார்  செய்யப்பட்டிருக்கும்.

            அன்றாடம்   இறந்தவர்    போக   எஞ்சியவர்  எண்ணிக்கைக்கு  ஏற்ப   முன்னதாகவே  எப்படி   உணவு   தயார்  செய்ய  முடிகிறது ?  இந்தச்  சந்தேகம்  தர்மரின்  மனதில்  எழுந்தது.

           இதைப்  பற்றி  ஒருநாள்   தலைமைச்   சமையல்காரரிடமே   தர்மர்  கேட்டு விட்டார்.

           தலைமைச்  சமையல்காரர்  சொன்னார்,  "  கண்ணன்  உண்ணும்  பாயாசத்தில்   எத்தனை  முந்திரிப்  பருப்பு    உண்கிறாரோ ?  அவ்வளவு   படைவீரர்கள்   விடிந்தவுடன்   நடைபெறும்   போரில்   இறப்பார்கள்  எனபது   கணக்கு.

          ஒரு  முந்திரிப்  பருப்பு  என்றால்   ஆயிரம்  பேர்   இறப்பர்.  இது  எனக்கும்  கண்ணனுக்கும்   மட்டுமே   தெரியும் ! "  என்றார்.

        இதைக்  கேட்ட  தர்மர்   பலமடங்கு   ஆச்சரியத்தில்  மூழ்கினார் ( நாமும்  கூடத்தான்........! ).

        " ஆம் !  உண்மைதான் !   அவனின்றி   ஓர்  அணுவும்   அசையாது "  என   அவரது   வாய்   முணுமுணுத்தது.


No comments:

Post a Comment