Wednesday, October 15, 2014

அப்புறம்,   நானும்   திருடன்தான் :
                              

                                  
          வேலு  நாச்சியார்   தலைமை   அமைச்சரான  மருது  பாண்டியர்
குடிலில்  நடந்தது   கீழ்க்கண்ட   நிகழ்ச்சி :

                  
                    ஏழை    எளியோருக்குக்  கொடுப்பதற்காக   சிவகங்கை  ராணியார்  அனுப்பி    வைத்து   இருந்த   சேலைகள் ,  கம்பளங்கள் ,  உணவு   தானியங்கள்,  கால்  நடைகள்  என்று   குடிசையை   சுற்றி   குவிந்து   கிடந்தன.

                   இதனை   அறிந்த   கள்வர்கள்   நடு  ராத்திரியில்   அங்கே   நுழைந்தார்கள். 

                  அவர்கள்    நுழைந்தவுடன்   பார்த்தது ,  தரையில்   பாய்  விரித்து   பழையக்   கம்பளிப்   போர்த்திக்கொண்டு   சின்ன  மருது   மற்றும்   பெரிய  மருது   இருவரும்   தூங்கிக்கொண்டு    இருந்தனர்.

                அருகினில்   மண்  குவளைகளும் ,   குடமும் ,   மண்ணால்   ஆன   பாத்திரங்களும்   இருந்தன .  திருடர்களுக்கு   ஆச்சர்யம்    தாங்கவில்லை.

               சின்ன  மருதுவின்   காலைப்  பிடித்த   திருடர்கள் ,  அவரை  எழுப்பி ,  
" ஐயா !   மன்னித்துக்  கொள்ளுங்கள்.   நாங்கள்   ராணியார்   மக்களுக்குக்   கொடுத்த   பொருட்களைத்   திருடிச்   செல்ல   வந்தவர்கள்தாம் !

           ஒரு   பக்கம்   ஏராளமாக   கம்பளிகளும் ,  விரிப்புகளும்  ,  உலோகப்   பாத்திரங்கள்   இருந்தும் ,  நீங்கள்   இந்தக்   குளிரில்   ஒரு  கிழிந்த   கம்பளியைப்    போர்த்திக்கொண்டு   இருவரும்   இருந்தீர்கள் .....அது   ஏன்   என்று   நாங்கள்   அறியலாமா ? "  என்று   கேட்டனர்.

           அவர்களைப்   பார்த்துப்   புன்னகை   புரிந்த   சின்ன  மருது,  " நண்பனே !  இந்தக்   கிழிசல்   கூட   இல்லாத   ஏழைகளுக்காக   வந்த    கம்பளிகள்   
இவை ,   அவர்கள்   தான்   இவைகளுக்கு   உரியவர்கள்.

          இவைகளை   எடுத்து   நான்   போர்த்திக்கொண்டால்   என்னையும்  திருடன்    என்றுதான்   சொல்லவேண்டும் ! "  என்றார்   மருது.

  (    நினைத்துக்   கூடப்   பார்க்க   முடியவில்லை !     எப்படிப்பட்ட     ஒரு   நேர்மை!... எவ்வளவு   பெரிய    சத்திய   நிஷ்டை !   இன்றைய   அரசு   அதிகாரிகளும் ,  அரசியல்  வாதிகளையும் ,  போலி  குருமார்களையும்  நினைத்தால் .................நெஞ்சு   பொறுக்குதில்லையே !  )

    இதைக்   கேட்டதும்    திருடர்கள்   அவரிடம்   மன்னிப்புக்  கேட்டு, 
" இனிமேல்    திருடுவதே   இல்லை  "  என்று   உறுதி   எடுத்துக்கொண்டு   திருந்திய   உள்ளங்களாகச்   சென்றார்கள்.



குறிப்பு :   எவரொருவர்   இத்தகைய   சத்திய    நிஷ்டை   கொண்டுள்ளாரோ   அவர்களைப்   பார்த்தாலே   தீய  குணங்கள்   நிறைந்த   உள்ளமும்   தூய்மை  அடைந்துவிடும் ........அதனால்   பெற்ற   தூய  உணர்வினால் ......அவர்களால்   மீண்டும்   தீமை   செய்யத்   தோன்றாது.  மீண்டும் ,  மீண்டும்   அந்த   தூய்மைக்கே   ஏங்கி   அவர்களும்   நல்லவர்களாக   மாறுகிறார்கள் .

       எவ்வாறு   எனில் ,  சத்திய  நிஷ்டையால்   சத்தியத்தில்  பிடிப்பு ,  அதனால்   செயல்களில்   ஓர்   ஒழுங்கு ,   வைராக்கியம்  ஏற்பட்டு ..........அதனால்   சித்தம்   தூய்மையும் ,   சுயநலமற்ற   தன்மையால்   எந்த   சிரமும்   சத்தியத்திற்காக  ஏற்றுக்கொள்ளக்   கூடிய   மனோவலிமையும்   பெறுவதால் ...........அது  சுயநலம்  மற்றும்   எந்த   தீங்கும்   இழைக்கும்   பலவீன   மனத்தை   அது  மிகுந்த   தாக்கத்தோடு   பாதிக்கும்.     

        காமராஜர் ,  கக்கன்   போன்ற   பொது  வாழ்வில்   தூய்மை   நிறைந்தவர்களாய்   இருந்ததாலேயே,  அவர்கள்  கீழ்   பணியாற்றியவர்களும்   பெரும்பான்மையும்    தூய்மையான   நிர்வாகமும் ,  நன்மையையும்   பிறருக்குத்   தர   முடிந்தது.



No comments:

Post a Comment