மலையை விழுங்கிய மாமுனிவர்:
தவ வலிமை மிக்கவரான ஒரு முனிவர் மூவுலகமும் சென்று வரும் ஆற்றல் பெற்றவர். அப்படி ஒரு சமயம் அவர் விண்ணுலகம் சென்றபோது அவரது பார்வை தர்ம தேவனின் ராஜ்ஜியமான நரகத்தின் மீது பதிந்தது.
அங்கே மிகப் பெரிதாக வளர்ந்து நின்ற ஒரு குன்று, அவரது கவனத்தை ஈர்க்க தர்ம தேவனிடம் அது பற்றி விசாரித்தார்.
" முனிவரே ! உமது சிறு வயதில் அதிதி ஒருவரின் உணவில் நீர் விளையாட்டாகப் போட்ட கல்தான் இப்படிக் குன்றாக உயர்ந்து நிற்கிறது. நீர் இங்கு வந்து இதனை உண்ட பிறகே மோட்ஷம் பெற முடியும் ! " என்று சொன்னார் தர்ம தேவன்.
அதிர்ந்து போன முனிவர் விமோசனம் கேட்க, பூவுலகில் இதே அளவுள்ள ஒரு குன்றை நீர் தின்று விட்டால் போதும், இக்குன்று மறைந்து விடும் என்றார்.
அப்படியே பூவுலகம் வந்து முனிவர் தம் தவ பலத்தால் குன்று ஒன்றினைப் பொடிப்பொடியாக்கி நீரில் கரைத்து விழுங்கினார்.
சிலா ( பாறை ) நிறைந்த குன்றினை அதம் ( பொடி ) செய்து உண்டதால் அம்முனிவருக்கு சிலாதர் என்ற பெயர் உண்டாயிற்று.
அந்த சிலாத முனிவர் யார் தெரியுமா ?
கைலையின் காவல் நாயகரான நந்தியம்பெருமானின் அப்பா தான்
இந்த சிலாத முனிவர்.
No comments:
Post a Comment