ஸ்ரீ யோக வாசிஷ்டம் :
பக்குவ நிலையில் உள்ள சாதகனுக்கு இந்த உபதேச கவசமே தன் ஞானத்திற்கும் முக்திக்கும் போதுமானதாகும். ஒவ்வொரு ஆன்ம சாதகனும் தினமும் நேரம் ஒதுக்கி தியானம் செய்ய வேண்டிய உபதேசம் இது. இந்த உபதேச நூலான "ஸ்ரீ சத்குரு ஞானகவசம்" தவத்திரு ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளால் அருளப்பட்டது.
மேலும் சமீபத்தில் முகநூலில் எம்மை பாதித்த , படித்த வற்றை , சிரவணம், மனனம் , நிதித்யாசனமாக , அனுபவமாகவேண்டும் என்ற பெரும் ஏக்கத்துடன், ஸ்வாமி ஞானானந்தர் திருவடிகளைப் பணிந்து ......................
ஹே மைந்தா! ராமா!! உனக்கு ஆனந்தம் வேண்டுமெனில், "எதேர்ச்சையாக" செய்ய நேர்வதை எந்த வித காரண காரியத்தையும் ஆராயாமல், உளம் களிப்பின்றியும் வெறுப்பின்றியும் செய்து, நீயாக எந்த ஒரு செயலையும் உன் அகங்காரத்தை கொண்டு செய்யாமல் இரு.
--யோக வாசிஷ்டம்.
--யோக வாசிஷ்டம்.
ஹே உத்தவா!
யார் மீதும் கோபமோ, பொறாமையோ, வெறுப்போ, அசூயயோ....... கொள்ளாதே.ஏனெனில் எந்த பரமன் உன் ஆன்மாவாக பிரகாசிக்கின்றானோ அதே பரமனே சின்ன எறும்பு முதல் பிரம்மன் வரையான அனைத்திலும் நான் என்று ஆன்ம ஸ்வரூபமாய் பிரகாசிக்கிறான்.
நீ ஒருவரைக் கோபித்துக்கொண்டால் அது அவர்களையல்ல............... இறைவனை கோபித்ததாகும்.
-ஸ்ரீகிருஷ்ணன்!!!

புத்தி அமைதி உற்றவன், ஜனக்கூட்டதிற்கோ, காட்டிற்கோ ஓடமாட்டான். அவன் எங்கும் சமனாய் உள்ளவாறே நிலைநிற்பான்!!!
--அஷ்டாவக்கிர கீதை!!!
--அஷ்டாவக்கிர கீதை!!!
*முக்தியாவது யாது??
எல்லாத் துயரங்களும், எல்லா அச்சங்களும், எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி.
அதை எய்த வேண்டும் என்னும் எண்ணம் உனக்கு உண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய்!!!
இல்லாவிட்டால் துன்பங்களிலே கிடந்து, ஓயாமல் உழன்றுகொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்!!!
*நீ எவ்வித செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையல்ல. "கடவுளுடைய செய்கை" என்பதை அறிந்துகொண்டு செய்.
*எல்லாம் கடவுள் மயம். எல்லா தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா வடிவங்களும், எல்லா நிலைகளும், எல்லா உயிர்களும், எல்லா பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்சிகளும், எல்லா செயல்களும், எல்லாம் ஈசன் மயம். ஆதலால் எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்!!!
--மகாகவி பாரதியார். (பகவத் கீதை நூலில் இருந்து)

ஹே ராமா!! இருப்பது நிர்குண ப்ரஹ்மம் மட்டுமே. பிரம்மத்தைத் தவிர்த்து வேறு எதுவும் அணுவளவும் இல்லை. இதுவே சத்தியம். ஆனால் உலக விஷயத்தை பொறுத்த வரையில் த்வைதத்தில் தான் பிரவிர்த்திக்கவேண்டும். உண்டல், உறங்கல், ஜீவித்தல்,...... முதலிய உலகாய விஷயங்களை அஞ்ஞானத்தால் தான் செய்தாக வேண்டும். ஆனால் ஞானம் எது என்பதை அறிந்து, அக்ஞானத்தை கையாளவேண்டும். அக்ஞானத்தில் மூழ்கிவிடக்கூடாது. உலகைப் பொறுத்தவரையில் த்வைதத்தில், கர்மயோகியாக இருந்து, உள்ளத்தளவில் ஆழ்கடலைப்போல சஞ்சலம் அற்று, கற்பனைகளும் சங்கல்பங்களும் ஒழிந்து, எதனாலும் பாதிக்கபடாதவனாய், அத்வைதானந்தமாய், ஜீவன்முக்தனாய் இருப்பாயாக.
--யோக வாசிஷ்டம்.
--யோக வாசிஷ்டம்.
மனிதன் தனக்கு சாதகமானதை நல்லவை என்றும் , பாதகமானதை தீயவை என்றும் தன் கற்பனையால் வரையறை செய்கிறான். அதே போன்று தனக்கு சாதகமானவர்களை நல்லவர்கள் என்றும், பாதகமானவர்களை தீயவர்கள் என்றும் எண்ணுகிறான். நன்றாக சிந்தித்துப் பார் ராமா !
உள்ளது அனைத்துமே அந்த பரவஸ்துவான பிரம்மமாய் இருக்க, இங்கு நல்லவை தீயவை , நல்லவர் தீயவர், அறிவுடையோன் மதிஈனன் , ஏழை பணக்காரன் , தீரன் கோழை ............என்னும் இரட்டைகள் எங்கிருந்து வர இயலும் ?
அனைத்தும் கற்பனைகளே ! உள்ளது அனந்த , அகண்ட , பரிபூரண , அமல , சத் சித் ஆனந்தம் எனப்படும் பிரம்மம் ஒன்றே. பிரம்மத்தைத் தவிர்த்து இங்கு நீயோ , நானோ வேறு எதுவுமே இல்லவே இல்லை. காணும் அனைத்தும் பிரம்மமயமாய்க் கண்டு ஜீவன்முக்தனாய் சுகித்திருப்பாய் !
----------மகரிஷி வசிஷ்டர் ( யோக வாசிஷ்டம் ).
நன்றி : ஞானானந்தமயம்
நன்றி : ஞானானந்தமயம்
No comments:
Post a Comment