பகவன் நாம ஸ்மரணை :
சாதனைகள் எல்லாம் கடவுளுடைய எண்ணம் இடைவிடாது இருக்கும் பொருட்டே. இவ்வாறு இடைவிடாது எண்ணிக்கொண்டு இருப்பதே ஒரு தெய்வ தரிசனம் ஆகும்.
பகவன் நாம ஸ்மரணை ஆனது எல்லாம் கடவுளின் சொரூபமாகவே பார்க்கின்ற விஸ்வரூப தரிசனத்தை அளிக்க வல்லது. ராம நாமம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதன் இனிமையான ஓசை நயம் சஞ்சலமான மனதிற்கு அமைதியை அளிக்கும் அபூர்வ சக்தி உடையது.
ராம நாமம் ...எப்படி சிறு கரையான் ஆனது மரத்தை துளைத்து, துளைத்து உள்ளே இருக்கின்ற கட்டையை அரித்துவிடுகிறதோ .......அதைப்போல ராம நாமமும் நம்முள் உள்ள ஆசைகள் , வாசனைகளை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து துவம்சம் செய்து நம்மை பரிசுத்தர்களாக்கிறது.
நாமத்தின் சப்தமே........நாதப் பிரம்மம். சிறிது காலம் இடைவிடாது ராம நாமத்தை ஜபித்தால் மனம் மோன நிலையை அடையும். இடைவிடாது ஜபித்தல் என்ற நிலை வந்தால் பின்பு நாமம் நம்மைப் பற்றிக்கொள்ளும். திவ்ய நாமத்தில் மூழ்கி பேரானந்தத்தையும், அமைதியையும் அனுபவித்துக்கொண்டிருக்கும்.
ஒரு கிருஹஸ்த சாதகனுக்கு நாம சங்கீர்த்தனமே மிக முக்கியம்.
அவனுடைய வீடு முழுதும் பகவானுடைய திவ்ய நாமமே எதிரொலித்தல் வேண்டும்.
இப்படிப்பட்ட வீடுகளில் இந்த தெய்வீக அலைகளினால், வீட்டில் உள்ள எல்லோருடைய உடலும், உள்ளமும் தூய்மையாக்கபடுவதுடன்
பேரானந்த வெள்ளம் சதா ஓடிகொண்டிருக்கும்.
எங்கு உள்ளன்புடன் அவனது திருநாமம் பக்தியுடன் பாடப்படுகிறதோ அங்கு அவன் உறைகின்றான்.
"அவனின்றி அணுவும் அசைவதில்லை !" - இதுதான் உண்மை. அப்படியென்றால் நான் , நீ , எனது , உனது என்ற எண்ணங்களுக்கு இடமேது ? எல்லாம் அவரே !
இந்த உண்மை அனுபவித்து அறிவதற்கு ......இடைவிடாது செய்யும் ராம நாம ஜெபமே தேவை. அவரை அன்றி எதுவும் , எவனும் உண்மையில் இல்லை.
எல்லாம் இறைவனே !
நன்றி : ஸ்வாமி பப்பா ராமதாஸ்
ராமதாஸரின் அமுத மொழிகள்
ஆனந்தாஸ்ரமம் வெளியீடு

No comments:
Post a Comment