Wednesday, October 8, 2014

மஹா பெரியவாளின்  உபதேசங்கள் 6:

                              

    முதுமை 

    " ரிடையர்   ஆகிவிடப்  போகிறோமே "  என்று   அழாமல்,  " எப்போது  ரிடையர்  ஆகி  அனுஷ்டனங்களை  எல்லாம்  செய்து, ஜபம்,  தவம் ,  சேவை , இறைபணி,  நம்மால்  முடிந்த  நல்ல செயல்கள்  அடுத்தவருக்கு  செய்வோம்" என்று  எண்ணவேண்டும்.

      மற்றவர்கள்  ஆபீஸ்  காரியம்போக  மிஞ்சிய  கொஞ்ச  நேரத்தில்தான்  பொதுத்தொண்டு  பண்ணமுடியுமென்றால்,  ரிடையர்  ஆன  நீங்களோ  ஃபுல்டைமும்    சோசியல்  சர்வீஸ்   பண்ணுகிற  பாக்கியம்  பெற்று  இருக்கிறீர்கள்.

        குடும்பப்  பொறுப்புகளைக்  கூடிய  விரைவில்  குறைத்துக்  கொள்ளவேண்டும். அதற்குப்  பதில்  பொது  ஜனங்களுக்காகப்  பொறுப்பு  எடுத்துக்  கொண்டு' புண்ணியம்   சம்பாதிக்கவேண்டும்.

        மரணம்  மிக'  அருகில்  என்பதை  அறிந்து,  தங்கள்  ஆத்ம  அபிவிருத்திக்காவும்   பாடுபடவேண்டும்.

                                                    ***********************

           நம்முடைய  புராதன  தர்மங்களை  காப்பாற்ற  நாமேதான்   ஆனதைச்  செய்யவேண்டும். நாமே   அவற்றை  செவ்வனே  கடைப்பிடிக்க  வேண்டும்.

             கற்றறிந்து,  அநேக  இடங்களில்  நல்ல  பதவிகள்  வகித்து, ஓரளவு  செல்வமும் ,  செல்வாக்கும்   பெற்று  தற்போது   நிறைய   ஸாவகாஸம்  பெற்றுள்ள   பென்ஷனர்களான   பெரியோர்களே  இந்த  விஷயத்தில்  தங்களால்  இயன்ற  பொறுப்பை  எடுத்துக்கொள்ளவேண்டும்.

                                                ************************

            வயதானவர்கள்  டென்னிஸ்கோர்ட் ,  சினிமா,  கச்சேரி  என்று  போவதைக்  குறைத்துக்கொண்டு ,  வைதீகமான,  தெய்வ  சம்பந்தமான  விசியங்களைத்   தெரிந்துகொண்டு ,  இயன்ற  மட்டும்   ஆசாரங்களை  அனுஷ்டிக்க  வேண்டும்.

           ரிடையர்   ஆன  பிறகாவது   எக்ஸ்டென்சன்,   ரீ   எம்ப்ளாய்மெண்ட் ,  சொந்த   பிசினஸ்   என்று   போகாமல்   நம்முடைய  ஆசாரங்களை   அனுஷ்டித்துக்  கொண்டு   சாஸ்திரோக்தமாக   வாழ்ந்து,  அடுத்த  தலைமுறைகளுக்கும்   வழிகாட்டியாய் ,   நம்பிக்கையாய் ......சாந்தி  கொடுப்பவராக   வாழப்  பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment