Tuesday, October 14, 2014

சுகம்  - பூரணத்துவம் -  ஆத்மா :

   फ़ोटो: A European Countess was leaving for Europe and she requested Bhagavan to bless her and her family.

Bhagavan said, "You do not go anywhere away from the Presence as you imagine. The Presence is everywhere."

TALK 470

           நான்  யார் ?   என்ற  ஞான  விசாரம்  மிக  முக்கியம்.
( தன்னை   தான்  அறிய  )   ஒரு   சாதகன்   செய்யவேண்டியதாக   பகவான்  அருளியதும்   இதுவே.   சகல   அனர்த்தங்களுக்கும்    காரணமான   இந்த   நான்   என்பதை   அறிந்தால்   அனைத்தும்   அறிந்ததாகும்,  என்பதே  பகவானது  அருள்மொழியாகும்.


                 இந்த   ஆத்மாவே   தானே     சுகசொரூபமாக   இருந்துகொண்டு ,     வெளியே   போகங்களாக  ( உலகமாக ,  உலகப்பொருட்களாக   தன்னை  வெளிப்படுத்தி ) அதுவே ,   அதனை   அனுபவிக்கும்   மனமாகவும்  வெளிப்படுத்திக்கொண்டு  இருக்கிறது.

             ஆத்மாவே    சாதகனுக்குள்  தன்னை   வெளிப்படுத்த   கருணைகொண்டு   வெளியே ,   மனமாக ,   சரீரமாக ,  வஸ்துக்களாக,  அனுபவிக்கும்  விஷயங்கள்,  பல  பொருட்களாக   மாறியது.

             இதில்   சுகத்தை   அடைந்து ,  அதாவது   வெளியே விளையாடி ,   விளையாடிக்  களைத்து ,  தற்காலத்துக்கு   ஒரு   ஓய்வு ,  ( விஸ்ராமம் ,  விஸ்ராந்தி )  பெற,  அதற்காகவே   சுஷுப்தி ( ஆழ்நிலை  தூக்கம் ).  இதிலிருந்து   முற்றும்  வெளியே   போகணும் ,  இனியும்  விளையாட்டு   வேண்டாம்  என்ற   போது ,  முமுட்சுத்வம்  வருகிறது.  ( அதாவது   முழுமையான   விஸ்ராந்தி , விஸ்ராமம்  வேணும்  என்றபோது   மட்டுமே )

           அந்தநிலையிலேயே   இந்த   ஆத்மா    எதுவாக  வெளியே   தன்னை  மனமாக ,  சரீரமாக ,  பொருளாக ,  விஷங்களை  அனுபவித்த  மனமாக   மாறினதோ ,  அதுவே   தன்னைதானே   பிரகாஷப்  படுத்த ..... வெளியே  மாற   செயல்பட்ட   அதே   ஆற்றலே ..........இப்போது  உள்ளே   திரும்ப   ஞான  விசாரமாக   அதே   ஆற்றல்   செயல்படுகிறது.

          ஒரே   ஆற்றல்   வெளியே   சென்றால் ......மனம் ,  உலக  அனுபவங்கள் .   அதே   ஆற்றல்  உள்ளே   திரும்பினால்   ஆத்மப்  பிரகாசம்,  ஆத்ம சொரூபம்.

         தன்னைத்தானே   பிரகாசமாக்க ,  சிரத்தையாக , வெளிப்படும்  இந்நிகழ்ச்சி   ஒரு  விபூதி, வைபவம் ......manifestation  ,  ஒரு   பக்குவம்  மிகுந்த   அந்த   சரீரத்துக்குள்    ஓர்   அந்தர்யாமியாய்   வெளிப்படும்.  இப்படி   தன்னை   அந்தர்யாமியாய்   வெளியிடும்   நிகழ்வே   அருளாய் ........அருள்  சக்தி    தான்
ஞான  விசாரம் ,......அருளால்   ஞான  விசாரம்   என்ற   உருவில் , சிரத்தை   என்ற  உருவில் ,  பக்தி  உருவத்தில் ,  அனுபவம்   என்ற   தாரையாய் ...........அந்த   சிற்சக்தி   உருவில் ,   அந்தப்   பக்குவிக்குள்   ஸ்புரிக்கிறது.

       
        அந்த   உயர்ந்த   பக்குவியின்   உள்ளே   ஸ்புரித்து,  அவனது   மனம் ,  புலன்கள் ,  கரணங்கள்,   அனுபவங்கள்   அனைத்தும்   தனது   பக்கமே   இழுத்துக்கொள்கிறது. அங்கு   ஆத்மாவே   தன்னை  வெளிப்படுத்திகொள்கிறது     ( சிற்சக்தி   இந்த   அற்ப   ஜீவனை   முழுங்கி   விடுகிறது ).

       
          இது   ஒரு   திருவிளையாடல்.

   
       இதனையே   ஒரு  சாஸ்திரோத்மாக   பார்க்கின்றபோது,  "  ஞான  விசாரமே  மிக   முக்கிய   சாதனம்  "  என்று   பகவான்   கூறினார்,

        இவ்விதம்    அந்தர்யாமியே   ( ஞான  விசாரத்தை  ) அனுக்கிரகம்   செய்கிறது.  விசாரம்   பண்ணுவதற்கு   தேவையான   ஆற்றலை  ( Power ) அந்தர்யாமியே   தருகிறது.

      " இதயத்தில்  நான்  என்று   நடித்திடுவையால்   உன்பேர்தான்- 
        இதயம்      என்றிடுவார்   தாம் ! "  -  என்று    பகவானும்   பாடினார்.


"  ஹே !  அருணாச்சலா !   இந்த  ஞான   விசாரத்  தெளிவு  என்னுள்   வர   நீயே   கருணைகூர்ந்து    உன்னை   என்னுள்   வெளிப்படுத்திகொடு  "  -  என்று   அக்ஷரமண   மாலையில்   பல  இடங்களில்   பாடியுள்ளார்.

           " ரமண   பகவானே !     நீரே   எம்முள்    இருந்து   .......இதயத்தை   நோக்கி   எம்மை   ஆகர்ஷிப்பீராக ! "  இதுவே   நமது   பிரார்த்தனையும்    கூட .......!



No comments:

Post a Comment