ஜீவனே சிவன் , சிவனே ஜீவன் ........எப்படி ? எப்போது ?
ரமண மஹா குருவின் அருளால் நாம் ஞான மலையாகிய அக நோக்கில் ( விசாரத்தில் ) ஈடுபட , அவரின் கருணை என்ற அந்த்மில்லாக் கண்ணாகிய நமது ஸ்வரூபம் மெல்ல மெல்ல புலப்படும்.
ஆரம்பத்தில் அறிவின் துணைகொண்டு முயற்சி செய்கிறோம் ! அந்த அறிவின் துணையாலேயே மலை ஏறுகிறோம். சாதனை முற்றுப் பெறும்போது அங்கு அறிவுக்கு வேலையில்லை. அப்போது உலகளாவிய பேரன்பு தோன்றுகிறது.
அறிவு முற்றுப் பெறுகின்ற இடத்தே , அன்பு விளைகின்ற இடத்திலே அநுபவம் தோன்றுகிறது. ஆன்மா இறைவனுடன் ஒன்றாகி , அன்பிலே விளைகின்ற ஆனந்தத் தேனை அநுபவித்து, அதிலேயே கரைகின்றது.
அம்புவில் ஆலிபோல் அன்புருவில் எனை
அன்பாய்க் கரைத்தருள் அருணாசலா !
என்று பகவான் பாடும் அநுபவம் இது. அதுவே பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்டு கால , தேச எல்லை கடந்து அநாதி வெளியில் விளைந்த வெறும் பாழ் என்ற மகோன்னத நிலை. அங்கு ஆத்மாவைத் தவிர வேறு பொருளே இல்லாத நிலை. அதுவே அருணகிரிநாதர் குறிப்பிடும் வெறும் வெளி !
பகவான் வாக்கிலேயே இதனைக் காண்போம் ! ஆன்மாவில் அகந்தை கானாதலுடன் ஜீவனின் தனித்தன்மை அற்றுப்போகிறது. ஜீவன் தன் மூல ஸ்வரூபமே ஆகிறான். அங்கு யார் ? எதற்கு ? எப்படிச் சரணடைவது ? இந்த நிலையே பக்தி , ஞானம் , விசாரணை அனைத்தின் முடிந்த நிலையாம்.
யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே ! ( திருவாய்மொழி 2-9-9 )
என்று இந்த நிலையையே நம்மாழ்வார் எவ்வளவு தெளிவாகக் கூறியிருக்கிறார்.
பொருள் : என்னையே நான் அறியாது , நான் என்றும் , எனது என்றும் மயங்கி இருந்தேன். ( உண்மையை ஆராயுமிடத்து ) - நான் , நான் என்பது நீயேதான். என் உடமை யாவும் நீயே. அகண்ட ஞானம் பெற்றவர் ஏத்தும் பரம்பொருள் நீயே ! ( பகவான் நம்மாழ்வார் பற்றிக் குறிப்பிடல். பகவத் வசனாமிர்தம் பக்கம் - 205- 207 ).
மேலும் பகவான் கூறுகிறார். சரணடைய முயற்சி மேற்கொள்ளும் போதெல்லாம் அகந்தை தலை தூக்கும். அதனை அடக்கி , ஒடுக்கவும் முயல வேண்டி வரும், சரணாகதி அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
பரமனே தனது அருளால் பக்தனின் மனதை உள்ளுக்குள் இழுத்து நிலை நிறுத்தினால் அன்றிப் பூரண சரணாகதி நிலை நிறைவேறுவது கடினம்.
( Day by Day with Bhagavan p.227. )
ஆன்ம ஞானத்தின் சிகரத்தில் இருந்து பகவான் கூறுகிறார். அகந்தை என்பது கூட ஒன்று தனியாகக் கிடையாது என்கிறபோது, அது எங்கிருந்து எழும் , அதன் மூலமாகிய அஞ்ஞானமும் இல்லை. அகந்தையும் இல்லை. அதைப் பற்றி எழும் பிரச்சனைகளும், துன்பங்களும் சற்றும் இல்லை என்பதை அறிவோம். அதைத்தான் அகந்தை அழிந்துவிட்டது என்கிறோம். ( Talks 197 வசனாம்ருதம் 2. பக்கம் 96 ) இதுதான் வெறும் பாழில் விளைந்த தனி என்னும் ஞானம்.
நம்முள்ளே ஊறி வருகின்ற இந்தப் பரமானந்தம் பெற அவசரம் ஏதும் தேவை இல்லை. வேகம் ........விவேகத்திற்குத் தடை ! ( வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க ! ) வேகம் இருந்தால் படபடப்பு , இருக்கும் , படபடப்பால் நிறைய தவறுகள் நிகழும் ......எனவே வேகம் இருக்கும்வரை உண்மையை உணரவே முடியாது. எனவே இத்தகைய வேகம் கூடவே கூடாது. அப்பொழுது தான் நம் உள்ளத்தே இறைவன் அருள் மெல்ல மெல்ல முகிழ்கிறது.
மெல்ல மெல்ல இறைவனை அறிக ! இறைவனின் நாமத்தை உச்சரிக்கும் போதே அது நமது உள்ளத்தில் பதியும்படி ஜபித்தல் வேண்டும். ரமண குருவினை இதயம் ஒன்றி தியானித்தாலே பரமானந்தம் அரும்பும் . மேலே ஒன்றும் இல்லாத , வேண்டாத பரமானந்தம் அது !
நன்றி : ரமணோதயம் , ஜனவரி 2012

No comments:
Post a Comment