பீஷ்மரின் செயலும், திரௌபதியின் சிரிப்பும் :
பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்தபோது தருமருக்கு பல நீதிகளை , பல சம்பவங்களாகவும் , கதைகளாகவும் கூறிக் கொண்டு இருந்தார்.
அப்போது திரௌபதி அதைப் பார்த்துச் சிரித்தாள். " ஏனம்மா சிரிக்கிறாய் ? " என்று பீஷ்மர் கேட்டார்.
அதற்குத் திரௌபதி, " இன்று இத்தனை நீதிகள் கூறுகிறீர்கள். ஆனால் அன்று அரசவையில் நான் மானபங்கம் செய்யப்பட்டபோது தாங்கள் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தீர்களே , ஒழிய எந்த நீதியையும் அன்று அவர்களுக்கு எடுத்துக்கூறித் தடுக்கவில்லையே ! அதை நினைத்துதான் இப்போது சிரித்தேன் ! " என்றாள்.
" நீ சிரித்தது சரிதான் ! அன்று நான் அதர்ம வழியில் இருந்ததற்குக் காரணம் துரியோதனன் கொடுத்த உணவை சாப்பிட்டுக்கொண்டு இருந்ததுதான், அந்த உணவின் குணதோஷமே என்னை அன்று இயக்கியது. அதனால் என்னிடம் சாத்வீகக் குணம் குறைந்திருந்தது.
இன்றோ , என் உடலில் உள்ள அத்தனை ரத்தத்தையும் அர்ஜுனன் தன் அம்பினால் எடுத்து , என்னைப் பரிசுத்தம் உள்ளவனாக மாற்றி விட்டான் !
அதனால் தானம்மா நீதிக் கதைகளைச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் " என்றார் பீஷ்மர்.

No comments:
Post a Comment