Wednesday, October 8, 2014

மஹா பெரியவாளின்  உபதேசங்கள் 7:
                       
                

      குடும்பம்

       எத்தனை  டொமெடிஸ்டிக்  டியூட்டி  இருந்தாலும்,  அதைப்  பண்ணிவிட்டு,  அதைப்  பண்ணின  அப்புறம்  தான்   சோசியல்  டியூட்டியும்  செய்யவேண்டும்.

            தன்   காரியத்தை  பிறர்   கையில்  விட்டுவிட்டும்,  அகத்து    வேலையைக்  கவனிக்காமலும்   ஊர்க்காரியம்   என்று  போவதில்   பிரயோஜனமில்லை.
                                         *************************

        ஒரு  ஸ்த்ரீயானவள்  ( பெண் )   ஒழுங்காக, பொறுப்பாக  வீட்டு  வேலைகளைப்  பண்ணுவதென்றால்  ( சமைத்துப்  போட்டு,  குழந்தைகளைக்  கவனித்து,   புருஷனுக்குச்  செய்யவேண்டியவைகளைச்   செய்வதென்றால் ) அதற்கே   நாள்  பூராவும்    ஆகிவிடும்.

         பொம்மனாட்டிகள்    அவரவர்   வீடுகளை   வீடாக   வைத்துக்  கொள்வதற்கானவற்றைப்  பண்ணினால்   அதுவே   நாட்டுப்பணி,  உலகத்தொண்டுதான்,  பரோபகாரம் தான்.
   
                                     ************************

        லோகத்துக்கு  நல்லது  பண்ணனும்  என்றே  ஆர்வமிருந்தாலும்  நமக்கும்  நம்   குடும்பத்துக்கும்   செய்தே  ஆகவேண்டும்  என்ற   நிர்பந்தம்  இருப்பதை  உணர்ந்து   இந்த  டியூட்டிக்கு   ஹானி   இல்லாமல்தான்   லோக  சேவை  செய்ய  வேண்டும்.

             தன்   வேலையை   இன்னொருத்தனிடம்   விட்டுவிட்டு  " ஊரானுக்குத்  தொண்டு   செய்கிறேன் "  என்று   போனால்   அது    பரிகாஸம் தான்.     Fraud      (மோசடி )  தான்.

            தாயார்,  தகப்பனார்,  சகோதரர்,  பத்னி,  புத்ரர்   இருந்தால்   அவர்களுக்கு  செய்யவேண்டிய   டியூட்டிகளைச்  செய்யாமல்   லோகத்துக்கு   உபகாரம்   செய்கிறேன்   என்றால்   அது  ஹிபாக்ரிஸி  ( போலி  வேஷம் )  தான்.
          

No comments:

Post a Comment