Thursday, October 9, 2014

தண்டனை  என்ன  தெரியுமா ? 
                      

       வரகுணப்  பாண்டியன்  ஆட்சிக்    காலத்தில்   ஒரு  நாள்   திருவிடை   மருதூர்  சிவன்   கோயில்   நிலத்தில்   விளைந்த   எள்ளை   கோயிலின்  எதிரே  உள்ள  இடத்தில்   காய   வைத்திருந்தனர்.

             ஒருவன்  வந்து   ஒரு  கைப்பிடி   எள்ளை   எடுத்து   வாயில்   போட்டபோது   மன்னன்   பார்த்துவிட்டான்.  ஆனால்   எள்ளை   அள்ளியவனோ   எதைப்  பற்றியும்  கவலைப்படாமல்    அதைச்  சாப்பிடுவதிலேயே   குறியாக  இருந்தான்.

             மன்னன்   அவனை   அழைத்து,  "  சிவாலயத்தின்   எள்ளைச்   சாப்பிட்டால்   என்ன  தண்டனைக்   கிடைக்கும்   தெரியுமா ? " என்று  கேட்டான்.



            " தெரியும் "  என்று   நிதானமாகச்   சொன்னதுடன் ,  கிடைக்கப்  போகும்  தண்டனையை   அனுபவிக்கக்  காத்திருந்தவனைப்   போல்   சலனமில்லாமல்  காணப்  பட்டான்.

           "  உனக்கான   தண்டனை   என்னவென்று   தெரியுமா ? "  மீண்டும்  அரசன்  கேட்டான்   அவனிடம்.

           "  தெரியும் ,  அடுத்த  பிறவியில்   எருதாகப்   பிறந்து   இந்த   ஆலயத்தின்   வேலைகளுக்குப்   பயன்படுவேன் ! "  என்றான்   நிதானமாக.......

                  


No comments:

Post a Comment