Wednesday, October 8, 2014

உண்மையான  திருமண   உறவு :


                       
     
       ராமனும்,  சீதையும்   காட்டினில்  இருக்கிறார்கள்.  இருவரும்  தபஸ்வினி   ஒருத்தியைக்   காணச்  செல்கின்றனர்.  கடுமையான  விரதங்கள்  மற்றும்   தவத்தின்  காரணமாக   அந்த   தபஸ்வினியின்   உடல்   வாடி,   வதங்கி   இருக்கின்றது.

           சீதை   சென்று   அந்த  தபஸ்வினியைப்  பணிந்தாள். அப்போது   அந்த   தபஸ்வினி   சீதையின்   தலையில்   கை   வைத்து  ஆசிர்வதித்துக்  கூறினாள் :

           "  சீதை ,  அழகிய,   ஆரோக்கியமான   உடல்  கிடைப்பது   பெரும்பேறு. அது  உனக்குக்  கிடைத்து  இருக்கிறது,    நல்ல  கணவன்   கிடைப்பது   அதைவிடப்  பெரும்பேறு,  அதுவும்   உனக்கு   கிடைத்திருக்கிறது.  அத்தகைய  கணவனுக்கு   முற்றிலும்   பணிந்து   நடப்பது  மாபெரும்   பேறு,  நீ  அவ்வாறு  நடக்கிறாய்,  எனவே  நீ   இன்பம்  நிறையப்   பெற்றவளாக  இருக்க  வேண்டும்".

                                        

          அதற்கு  சீதை  சொன்னாள் :  " அம்மா !  கடவுள்  எனக்கு  அழகிய,   ஆரோக்கியமான   உருவம்    தந்திருக்கிறார்,  ஒரு   சிறந்த   தர்மவானான   கணவனை   அளித்திருக்கிறார் ;  இவற்றிக்காக  நான்   மிகவும்   மகிழ்கிறேன். ஆனால்   நீங்கள்   மூன்றாவதாக   ஒன்றைச்   சொன்னீர்களே ,  அதைப்  பொருததவரை,  நான்   அவருக்குப்  பணிந்து   நடக்கிறேனா,  அல்லது   அவர்  எனக்குப்  பணிந்து   நடக்கிறாரா  என்பது   தெரியவில்லை.


         ஒன்று   மட்டும்  எனக்கு  நன்றாக   நினைவுள்ளது. அவர்  எனது  கையைப்  பற்றிக்  கொண்டு   வலம்  வந்தாரே,  அப்போது,   அவர்   என்னுடையவர்,  நான்  அவருடையவள்   என்பது    எனக்குத்   தெளிவாக  தெரிந்தது.  இது   இந்த   அக்கினியின்   பிரதிபலிப்போ   அல்லது   கடவுளே  எனக்கு   அப்படிக்  காட்டினாரோ   தெரியாது.  அன்றிலிருந்து   எனக்குத்   தெரிவதெல்லாம், நான்   அவரது   வாழ்க்கையின்   நிறைவு,  அவர்   என்  வாழ்க்கையின்   நிறைவு  என்பது  மட்டுமே ! "  என்றாள்   சீதாதேவி.

        இந்தப்   பண்பே  இல்லறத்தார்கள்  பணிந்து   வணங்கி   ஏற்க  வேண்டிய  பண்பாகும் !
                                             
                                    

No comments:

Post a Comment