Wednesday, October 1, 2014

உள்ளது  அவ்  ஏகான்ம   வஸ்துவே - பகவான்  ரமண  மகரிஷி.



ஒரு  ஊரில்  ஒரு  ராஜா  இருந்தார்.  அவரது  அரண்மனைக்கு  யார், யார்  மகான்கள்   வந்தாலும்  அவர்களை  பகவானாகவே   பாவித்து ,  வரவேற்று  பாத  பூஜை  செய்து,  சகல  மரியாதைகளும்  அளித்தார். இது   போதாதா ?  நம்  போன்றோருக்கு ........... அரசனை எல்லோரும்  ஏமாற்றுவார்களே .........என்று  
( நல்ல எண்ணத்தால்..! ) வருந்தி  அரசனை  திருத்த  உள்ளம்  கொண்டார்..........அமைச்சர்.

அரண்மனையிலும்   எல்லோரும்  கேலியும் , கிண்டலுமே  பேசினர். சாதுக்கள் , சந்நியாசி   வேசமிட்டு  இந்த  அரசனை   யார்  வேண்டுமானாலும்  ஏமாற்றலாம்  என்று  பேசிகொண்டார்கள்.  குரு  போல  வேஷமிட்டு,  மெத்த  படித்தவர்  போல,  மகான்கள்  என   வருகிறார்களே !....ஏமாளி  ராஜா   என்றனர்.

அரசனுக்கு   எப்படியாவது   ஒரு  பாடம்  கற்பித்து  திருத்த  வேண்டும்  என்று  அமைச்சர் , ஒரு  கலைகூத்தாடியை  ( தெருவினில் செப்படி   வித்தை  காட்டுபவர்) ஒரு  நாள்  அரண்மனைக்கு  வரவழைக்க ..........சந்நியாசி   வேசமிட்டு  அழைத்து வர  .......அந்த  சந்நியாசியும்   ராஜாவிடம் ......செப்படி  வித்தையில்  விபூதி ....இன்னும்   ஏதேதோ  வரவழைக்க .......அவைகளை  அரசனிடம்  கொடுத்தார்.

ராஜாவும் , பரம  பக்தியோடு  அவரை  பாத பூஜை செய்து , வழிபட்டு , மந்திரங்கள்  சொல்லி , மாலையிட்டு , .........சம்பாவனை  செய்து  பக்தியோடு  வழியனுப்பி   வைத்தார்.



மந்திரிக்கோ  ஒரே  சிரிப்பு .........அவருக்கல்லவா   உண்மை  தெரியும் ! அவன்  சந்நியாசி   அல்ல !  வெறும்   கலைகூத்தாடியென்பது !

அடுத்தநாள் ........ராஜாவை ,  மந்திரி   தெருவழியே   அழைத்துச்  சென்றார். அங்கு   முந்தைய   நாள்   அரண்மனைக்கு   வந்த  கலைகூத்தாடி   செப்படி   வித்தை   காட்டிகொண்டு  இருந்தான். மெதுவாக  அங்கே  அழைத்துச்  சென்று   கூட்டநடுவில்  .......சுட்டிக்காட்ட ....." அரசே !  அது   யார்   என்று  பார்த்தேளா ? " என  வினவ ..

மந்திரியின்  லட்சியம்  என்னவெனில் ......".ஐயயோ !  நேற்றோ  அரண்மனையில்   சந்நியாசி  வேஷமிட்டு  என்னை  ஏமாற்றி ,  இன்று  இங்கு  தெருவில்  மேஜிக்  காட்டிகொண்டு  இருக்கானே !"  ராஜா   சொல்லவேண்டும்   என்று  எதிர்பார்த்தார்.

ஆனால்  ராஜாவோ ...."ஆஹா " !  என்று  திரும்பவும்  ஒரு நமஸ்காரம்  பண்ணினார் .   பகவான்   என்ன என்ன  வேஷம்  போட்டுக்கிறார் !  அரண்மனையில்   ஒரு குருவாய் ,  யோகியாய்  வேஷத்தில்  வந்தார் ..........இங்கோ   தெருவில்  செப்படி  வித்தை   காட்டுபவராக  வேஷமிட்டு  உள்ளார் . ஆஹா !  ஆஹா !  இந்த   பிரபஞ்சமே   அவனோட  செப்படி  வித்தை  தானே !"  என்றார்.

குறிப்பு :

                  நண்பர்களே !  ராஜா   அந்த   ஆளையே   பார்க்கவில்லை ! நமக்கும்  அந்த  பாவத்தோடு   பார்த்தோமானால் ............... யார்  வருகிறார்கள்   என்பது 
பிரச்சனையே  இல்லை.  வைதீக  காரியமாகட்டும் , பூஜை  முதலான   கோவிலாகட்டும் ...........ஏன்  குடும்பத்திலாகட்டும் .......வேலை  செய்யும்  இடத்திலாகட்டும் ,,,,,,இந்த  பாவம்  இருத்தல்  வேண்டும்........யார்  வருகிறார்களோ .......அவர்கள்  அருணாச்சல  சொரூபம்  என  பார்த்தால்  போதும்....அவர்களுடைய  தோற்றம் , புத்தி , செயல்   யோக்கியதை  பார்க்காமல் ........இருந்தால் ,  ஒரு பக்கம்  நாம்  நமது  தர்மத்தை  செய்கிறோம்!
மற்றோர்  பக்கம்  அவர்களை  பகவத் சொரூபம்  என  பார்க்க .....அவர்களின்  தனிப்பட்ட  குணத்தோஷங்கள்  முக்கியமாக  தெரியாது.

   இது   நடைமுறையில்  மிகவும்  கடினம்தான் .....பேசுவது , சொல்வது  எளிது. அதன்  கருணையால்  கைவரும்.

என்ன  கடினம்  எனில் .........இவனை  எனக்கு  தெரியுமே ....நேற்று  தெருமுனையில்   நின்றிருந்தானே !......இவனையா ? .........என  கேள்வி  கேட்கும்   மனதை  பகவத்  சொரூபம்  எனவே  திருப்ப  வேண்டும்.

இதுதான்   அந்தர்யாமியாக  இருக்கும்  பகவானை  பார்க்கும்  வித்தை.

ரமண  பகவானும் , அருணாச்சல  பஞ்சரத்னத்தில்  இதனையே
   
" எல்லாமும்  உன்னுருவாய்   கண்டு ,  அன்னியமில்  அன்பு  செய்யும் ..........அருணாச்சலா " 

என்று    குறிப்பிடுகிறார்!

முடிந்தமுடிவாக .......................

சம்சாரம்  ஒழியணுமா ?  எப்படி ?............கண்ணைத்  திறந்துகொண்டே , காதை  திறந்துகொண்டே  விவகாரம்  பண்ணும்போதும்  எதுவும்  நம்மை  பாதிக்கக்  கூடாது.

இங்கு  பார்க்கிறதெல்லாம்  இறைவா! ..........எல்லாம்  உன் சொரூபமாவே  தெரியணும்.........................

ஆத்மாவிலிருந்து  ஒரு  பொருள்  அன்னியமாகத்  தெரியக்கூடாது.

இதற்கு  கண்ணை  மூடிகொள்ளணுமா .........இல்லை  சுஷுப்தி  யைப்  போல  ஒண்ணும்  தெரியாம  இருக்கணுமா  ?  அதுவுமில்லை.

தங்கத்தினால்   பண்ணப்பட்ட  வளையல் , மோதிரம் , கிரீடம் . அட்டிகை  ........என   இருந்தாலும் ..........(  பேர்  தானே  வேறு, வேறு ........)

அனைத்தும்   தங்கத்தினாலேயே   உருவானது  என்பதே  உண்மை.

இங்கு  தங்கம்  தானே  வஸ்து ........உண்மை !  தங்கம்  தானே  பல  நாம ...ரூபம் ( வளையல், மோதிரம்  என )  பூண்டுள்ளது.

அதைபோன்றே .....................................................

ஒரே  பரமாத்ம வஸ்து ..........ஆன்மாவே  இங்கு  பிரபஞ்சமாக .........அநேக  உருவங்கல்ல ..........பெயர்கள்ல ............இங்கு   இருக்குனு   கொஞ்சம்   தெரிஞ்சாலே   போதும்.  கொஞ்சம்  கொஞ்சம்   வெளில   மனம்  வியவகரிக்க  இது  தோணினா   ..................சாந்தி  வரும்.

நம்ம  தர்மத்தை  பண்ணும்போது  நாம .....விகல்பம்  இல்லாம  இருக்க  முடியும்.

இது  பூரணமாக   வந்துவிட்டால்  நாமே  ஜீவன்முக்தர்  ஆய்ட்டோம்ன்னு.........பிரம்ம  நிஷ்டனாக  இருக்கோம்ணு  தெரிஞ்சிக்கலாம்.

இது   எந்த  நிலையிலும்  கலையாம  இருந்துட்டா ...........விவகாரப்  பிரபஞ்சம்  இல்லாமப் போய்டும்னு   தெரிஞ்சிக்கலாம்.

இது  தான்   பாகவத  இலட்சியம்.

" ஆத்மைவ  இதம்  சர்வம் " -----  உள்ளது  அவ்  ஏகான்ம  வஸ்துவே






,  

No comments:

Post a Comment