உத்தமனுடன் உரையாடல் :
எம் தலைவ! சாந்தி அடைவது எங்ஙனம் ?
ஆணவத்தை அழிப்பதன் மூலம் !
எம் தலைவ! ஆணவத்தை அழிப்பது எங்ஙனம் ?
இன்றே, இப்பொழுதே என்னிடம் சரணடைவதன் மூலம் !
எம் தலைவ! உன்னைச் சரணடைவது எவ்வாறு ?
" நான் ஒரு அஸக்தன் " என்று அறிவதன் மூலம் !
எம் தலைவ! நான் ஒரு ஆதரவற்ற அஸக்தன் என்பதை எப்படி அறிவது ?
அருள் தாரையில் இடைவிடாது நனைவதன் மூலம் !
எம் தலைவ! அருள் எப்போது உதிக்கும் ?
நீ உன்னுடைய முயற்சிகளில் தோற்கும்போது ......!
எம் தலைவ! இம் முயற்சி என்பது எது ?
உள்ளத்தையும், உடலையும் தூய்மை ஆக்கலே !
எம் தலைவ! எம் உள்ளத்தை எப்படித் தூய்மையாக்குவது ?
பக்தி மற்றும் தன்னலமின்மையால் ...........!
எம் தலைவ! எப்படி தன்னலமின்மையை அடைவது ?
அஹங்காரத்தின் செயல்பாடுகளை இடையறாது கவனிப்பதன் மூலம் !
எம் தலைவ! பக்தியை எங்ஙனம் பெறுவது ?
இடையறாது என்னை எண்ணுவதால் !
எம் தலைவ! எங்ஙனம் உன்னை எண்ணுவது ?
என்னுடைய திருநாமத்தை இடைவிடாது ஜபிப்பதன் மூலம் !
எம் தலைவ! ஜபிக்கும் திறனை எங்ஙனம் பெறுவது ?
ஜபத்தில் அழ்ந்திருக்கும் எம் பக்தர் தொடர்பால் ..!
எம் தலைவ! உன் பக்தர்களை எங்ஙனம் அறிவது ?
அவர் தம்மைச் சூழ்ந்திருக்கும் அன்பு மற்றும் சாந்தியின் மணத்தால் .....!
நன்றி : நொச்சூர் வெங்கட்ராமன் , ரமணோதயம் .

No comments:
Post a Comment