ஸ்வாமி ராமதாஸின் அமுத மொழிகள் :
யார் ஒருவர் "ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்" என்னும் மந்திரத்தை பதிமூன்று கோடி தடவை ஜபிக்கிறானோ, அவன் நிச்சயமாக ஸ்ரீ ராமரின் தரிசனத்தை அடைவான் என்று ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் உறுதி கூறுகின்றார்.
ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் சொன்ன மந்திரத்தில் " ஓம் " என்ற அக்ஷரம் இல்லை. ராமதாஸ் உங்களுக்குக் கொடுக்கும் மந்திரம் ............
" ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் "
என்பதாகும். ஓம் என்னும் பதத்திற்கு அளவில்லா தெய்வீக சக்தி உள்ளது. ஆகையால் ராமதாஸ் தமது சொந்த அனுபவத்தின் மூலம் சொல்லுவது என்னவென்றால் ------யார் ஒருவன் இந்த ஓம் அக்ஷரத்துடன் கூடிய ஸ்ரீராம நாமத்தை ஆறு கோடி தடவை ஜபிக்கிறானோ அவன் மோக்ஷம் அடைவான் . ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அடையும்வரை எப்போதும் இந்த நாமத்தை ஜபி .
இதற்காக எண்ணிக்கையைக் குறித்து வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எப்பொழுது இந்த எண்ணிக்கை ஆறு கோடி ஆகிறதோ அப்பொழுது உனக்குத் தானாகவே கடவுளுடைய புருஷோத்தம சொரூபமாகிய ராமனின் அநுபூதி கிடைத்து விடும்.
ராம நாம ஜபம் தான் அவனை நம் இதயத்தில் தோன்றச் செய்து காட்சி
அளிக்க வழி செய்கிறது. " ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் " என்ற மந்திரத்தின் பொருள் பின்வருமாறு :-
ஓம் - நிர்குண பிரம்மம்
ஸ்ரீ -- தெய்வீக சக்தி
ராம் -- உண்மையாயும் , அனைத்தின் ஆதார சக்தியாயும் இருக்கும் சகுண , நிர்குண கடவுள் ..... ' ராம் ' என்னும் சொல் பகவத்கீதையில், சொல்லப்பட்டுள்ள புருஷோத்தமனைக் குறிக்கிறது. அவன் ஒரே சமயத்தில் புருஷனாகவும் , பிரகிருதியாகவும் ( சிவ , சக்தி ) இருக்கின்றான்; அதற்கு அப்பாற்பட்ட புருஷோத்தமனாகவும் ( பரப்ரம்மம் ) இருக்கின்றான்.
ஜெய் ராம் -- ஸ்ரீ ராமனுக்கு வெற்றி
ஜெய் ஜெய் ராம் -- வெற்றி வெற்றி ஸ்ரீ ராமனுக்கு
" ஒரே சமயத்தில் உண்மையாயும், அனைத்தின் ஆதார சக்தியாயும் உள்ள சகுண , நிர்குணமாயும் இருக்கும் கடவுளுக்கு வெற்றி, ... வெற்றி,....வெற்றி ! "
நமது இதயத்தில் இருக்கும் கடவுளுக்கு வெற்றி ஏற்படும் பொழுது, அஹங்காரத்திலிருந்து உதித்த அந்தகாரம் மறைகிறது . அப்பொழுது அளவற்ற நித்யானந்தமும் ......சாந்தியும் தவிர அங்கு வேறோன்றும் இல்லை .
எனவே, சரீர உழைப்பில் ஈடுபட்டிருக்கும் பொழுதும் ஒரு க்ஷண நேர இடைவெளி கூட இல்லாமல் திவ்ய நாமத்தைச் சதா ஜெபித்துக் கொண்டு இரு. நாமத்தை சதா சர்வகாலமும் ஜெபிக்கும் பயிற்சி இல்லாவிட்டால் துன்பம் உன்னை வந்து அடைவதை தவிர்க்க முடியாது . இதனை எப்போதும் உறுதியாக அறிந்துகொள்.
-----ஸ்வாமி ராமதாஸ்
நன்றி : ஆனந்தாஸ்ரமம் பதிப்பு : ராமதாஸரின் அமுத மொழிகள்.

No comments:
Post a Comment