Tuesday, September 9, 2014



மகான்களின்  வாக்கு :

" உடலால்  நாம்  எந்த  காரியத்தில்  ஈடுபட்டிருந்தாலும் , மனம்  மட்டும்  
ஸ்ரீ ராமனிடத்தில்  இருக்க  வேண்டும். அப்படி  இருந்தால்  மனம்  தூய்மையில்  நிலைத்து  நிற்கும். ஏனெனில்  ஸ்ரீ ராம பிரானின்  நினைவு  இருக்குமிடத்தில்  தீய  எண்ணங்கள்,  மற்றும்  தவறான  சிந்தனைகள்  அணுகாது.

நிர்மலமான  மனதுள்ளவன் ,  அவன்  ஏழையாக  இருந்தாலும் ,  கல்வி  அறிவு  அறவே  அற்றவனாக   இருந்தாலும் ,  ஈன  குலம்  என்று  பிறரால்  இகழபடுப்பவனாக  இருந்தாலும்......மனம்  ஸ்ரீ ராம பிரானையே  நினைப்பதால் .......அவன்  ஸ்ரீ ராமனை   எளிதில்  அடைந்துவிடுகிறான்!

                                                                              ​​ ​​​ ---ஸ்ரீ  துக்காராம்  மகராஜ்  அவர்கள் 


கருத்து :   ஸ்ரீ  ராம  பக்தியும் ,  ஸ்ரீ  ராம  நாமமும் ,   நம்  உள்ளத்தில்  பாவ  எண்ணங்கள்   அணுகாமல்  நம்மைப்  பாதுகாக்கும். அதனால்  நாம்  எந்த
காரியத்தில்  ஈடுபட்டிருந்தாலும் ,  மனம்  மட்டும்
ஸ்ரீ  ராம  பிரானிடத்திலேயே ,  ஸ்ரீ  ராம  நாம  ஸ்மரணையிலேயே   இருக்க  வேண்டும்.



நன்றி : திரு . ஏ. எம் . ஆர்.  அவர்கள் ,  குமுதம்  ஜோதிடம் .....

No comments:

Post a Comment