Friday, September 12, 2014

அடங்கா ஆசையே நல்வழியில் திரும்பி அடங்கியது !

குருவே  மனைவியாய் .....
              மிகுந்த  ஆசையும் ,   காமத்தில்  தீராக் காதலும்  கொண்ட  தனது  முரட்டு  மகனுக்கு  அரண்மனையில்  வேலை   வாங்கித்தந்தார், அந்த  அந்தணத்  தந்தை.

          மகனுக்கு    வேலையிலோ ,  ஏன்   இந்த  உலகத்தில்  எதன்  மீதும்  சிறிதும்  நாட்டமில்லை,  தனது  அன்பு  மனைவியைத்  தவிர ..........எந்நேரமும் அவளுடன்  இருப்பதே  வாழ்வின்  நோக்கமாயிற்று.  இந்நிலையில்  அரண்மனையில்  அரச உத்தியோகத்தைத்  துறந்து,......  வீட்டுக்கு  ஓடி வந்தான்.

          மனைவியோ ..........வீட்டினில்  இல்லை.  தந்தையின்  வீட்டிற்குச்  சென்றுவிட்டாள். கருமையான  அடர்ந்த .....மையிருட்டு .....விடாத   அடைமழை ............வழியெங்கும்  வெள்ளநீர்  ஓடுகிறது.   அவனும்  தட்டுத்தடுமாறி  ஆற்றைக்  கடந்து .........கொடிகளைப்   பிடித்து   தொங்கி .......  வீட்டின்  மாடியில்   ஏறி  மனைவியின்  அறைக்கதவினை   தட்டினான்.  கதவைத்  திறந்த  மனைவிக்கு  ' பகீர் '  என்றது. கணவர்  தொப்பலாக  நனைந்து,  உடலில்     சிராய்ப்புக் காயங்களுடன்   வந்திருப்பதைக்  கண்டாள்.

       " இந்த  மழையில்  ஆற்றைக்  கடந்து  எப்படி  வந்தீர்கள்? " என்றாள்.

       " ஒரு  கட்டையைப்  பிடித்து " என்றான்,   அவன்.

       "  கட்டையா ........... வெள்ளத்தில்   பிணங்களும், முதலைகளும்  அல்லவா  மிதந்து  போய்க்கொண்டிருக்கின்றன!  சரி, மாடிக்கு  எப்படி  வந்தீர்கள் ? கீழே  கதவும்  பூட்டியிருக்கின்றனவே!..............."

       " மர  விழுதைப்  பிடித்து  ஏறி  வந்தேன் ".

        விளக்கை  எடுத்து  வந்து  வெளியே  பார்த்தாள்.  மாடியை  ஒட்டிய  கிளையில்  மலைப்பாம்பு  தொங்கிக்கொண்டிருந்தது.

       " அப்படி  என்ன  அவசரம் ? "  கடிந்து  கொண்டாள்.

       " உன்மேல்  அடங்காத  ஆசை ! "  என்றான்.

      " நோய்க்கே  இரையாகி   அழியப்போகும்  இந்த  உடம்பின்  மீது  இவ்வளவு
ஆசையா ?  இவ்வளவு  ஆசையும்  அழியாப்பதம்   தரும்   " ராம நாமத்தின்  "
மீது   வைத்திருந்தால்   கதியாவது  கிடைக்குமே ! " ,,,,,,என்று  வார்த்தைகளால்,  துக்கத்தில்   வெடித்துச்  சிதறினாள்.

      ஒரு  கண  நேரம்  அவளது  வார்த்தையைக்  கேட்ட  அவன்  உள்ளத்திலும் , வானிலும் .........ஒரே  நேரத்தில்  மின்னல்  வெட்ட, ......   உண்மையை  உணர்ந்தான்.

   ஆணாதிக்கம்  காட்டாமல் ,  அமைதியாய்   உள்ளுக்குள்,  விசாரித்து  அடங்கினான் ....இவள்  மீது  ப்ரியம்  என்பது .....இவளால்  கிடைக்கும்  மகிழ்ச்சியால் .... இவள்  தரும்  இன்பத்தால் .......இவள்  மறுத்தால்  வேதனை ..........அப்போ ! எதனாலும்  பாதிக்கப்படாத  மகிழ்ச்சி  ஒருவேளை  " ராம  நாமம் "  தந்தால் ...... சரி  இந்த  வினாடி  முதல்..... இந்த      வாழ்வு  ,.........ராம  நாமத்தில் .......கரையட்டும் !

      " ராம  ராம  ராம  ராம  ராம  ராம  ராம  ராம  ராம "...........என்று  உள்ளூர  மூச்சு  ஓட   ஆரம்பித்தது.

     " ராம  நாம "   மகிமையை    உளப்பூர்வமாக   உணர்ந்து   அமர  கவியாய்  மாறினார் .

    அவர்தான்   பின்னாட்களில்  துளசிதாஸர்   என்ற  பெயரில்
  ' துளசிதாஸ்  இராமாயணம்  '  இயற்றி  ராம  பக்தராகப்   போற்றப் பட்டார்.

         இந்த  ' துளசி  இராமாயணம் ' வடமொழியில்   எளிய  நடையில் , பாமரரும்  பொருள்  உணரும்  வண்ணம்  எழுதப்பட்டு  பிரசித்திப்  பெற்ற  காவிய நூலாக 
விளங்குகிறது.
குறிப்பு :
                     நண்பர்களே !  மிகுந்த  வேட்கை ......கிடைக்காத  பொழுது  மிகுந்த  துன்பம் .....விரக்தி ....வேதனையில் ....மிகச் சரியான  திசை திரும்பல்.  இங்கும்  தனது    உரிமை  என்றும் ....வாதாடாமல்  .....    ஆணாதிக்கம்  காட்டாமல் ..........ஏன் ? ...ஏன் ?   மறுக்கபடுகிறது ... உள்ளுக்குள்  துடிக்க  .......வேதனை!  சரி   இந்த  வேதனையில்  இருந்து  வெளியேற....  தவித்து  நிற்க ....   துன்ப சொற்களால்   துடிக்க  வைத்த  அதே  மனைவி .. ....ராம  நாமத்தை   ..... உச்சரிக்க ......மனைவியின்  உபதேசமாக  எடுத்துக்கொள்ள ......இறைவனின்  கருணை  கைகொடுக்க  துளசிதாஸரானார்.

No comments:

Post a Comment