அன்னையைப் பற்றி ஸ்ரீ ராம கிருஷ்ணர் :
சில நேரங்களில் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பெண்கள் சூழ்ந்து கொண்டு' அவரது அனுபவங்களைக் கேட்பார்கள். அவர்களுடன் அன்னை சாரதையும் வந்து அமர்வார். குருதேவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே சில நேரங்களில் அன்னை தூங்கிவிடுவார். மற்றவர்கள் அவரை எழுப்ப முற்படும்போது ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்களைத் தடுப்பார்.
" அவளை எழுப்பாதீர்கள்! அவள் எல்லாவற்றையும் கேட்கத் தேவையில்லை. அவள் மட்டும் விழித்துக்கொண்டு நான் கூறுவதைக் கேட்டால், அவள் நம்மிடையே இருக்க மாட்டாள். தன் உண்மைச் சிறகை விரித்துக்கொண்டு, தனது இருப்பிடத்திற்கு பறந்து போய்விடுவாள் " என்றார்.
ராது ஒருமுறை அன்னையை காலால் எட்டி உதைத்துப் பழியை அவர்மீதே போட்டாள், " அடக் கடவுளே! நீ என் காலைத் தொட்டுவிட்டாயே, என் கதி என்னவாகும் ? " என்று கேட்டாள்.
அப்போது, அங்கு வந்த பிரம்மச்சாரி ராஷ்பிஹாரி, " பைத்திய மாமி
( ராது ) அன்னையை அவமதித்தாலும், ஏசினாலும் தன் கால் அன்னையின் மீது பட்டதற்குப் பயப்படத்தான் செய்கிறாள் " என்றார்.
அன்னை உடனே, " மகனே, ராமன் சாட்ஷாத் நாராயணன், சீதைதான் மகாலட்சுமி எனபது ராவணனுக்குத் தெரியாதா...... என்ன ? ஆனாலும் , அவன் அவனது பாத்திரத்தை நடித்தான். அதுபோல் இவளுக்கும் என்னைத் தெரியாதா ! நன்றாகத் தெரியும். ஆனால், அவள் இந்தப் பாத்திரத்தை நடிக்கவே பிறந்துள்ளாள் " என்றார்.
அன்னை ஒருநாள் காலையில் சாணமிட்டு , வீட்டை மெழுகிக்கொண்டு இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் வேப்பங்குட்சியால் பல் துலக்கியவாறே கேலியும், கிண்டலுமாகப் பல்வேறு விஷயங்களைக் கூறிக்கொண்டிருந்தார்.
இடையில் அவர், " முதல் குழந்தை பிறந்ததும் ஒரே அமர்க்களம். ஆடை என்ன ! ஆபரணம் என்ன ! ஆனால் அக்குழந்தை இறக்கட்டும். பின் கண்ணீரும், கம்பலையும் தான் " என்றார். அன்னை எதுவும் கூறாமல் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் விடாமல் அன்னையைத் தூண்டுவது போல் குழந்தைகள் இறந்துபோவது' பற்றியே பேசினார். அன்னையால் பொறுக்கமுடியவில்லை. " பிறக்கின்ற குழந்தைகள் எல்லாமா இறக்கின்றன ? " என மெல்லிய குரலில் , ஆனால் உறுதியாகக் கூறினார்.
அவ்வளவுதான், ஸ்ரீராமகிருஷ்ணர் உடனே, " ஐயோ! அப்பா! உண்மை தெரியாமல் நல்லபாம்பின் வாலையல்லவா மிதித்துவிட்டேன் ! எளிமையானவள் , வெகுளி என்றெல்லவா நினைத்திருந்தேன்! இவளோ இப்படி நறுக்கென்று கேட்கிறாளே, ஆஹா ! " என்று மகிழ்ச்சியுடன் கூவினார்.
அன்னை அங்கிருந்து அகன்றுவிட்டார். அன்னையைக் கேலி செய்து பேசினாலும், அவரிடம் பொங்கிப் பிரவகித்த தாய்மை உணர்வை குருதேவர் கவனிக்கத்தவறவில்லை.
" இவள் ஓரிரு பிள்ளைகளுக்கு மட்டுமே தாய் ஆகப் பிறந்தவளல்ல. உலகனைத்துக்குமே தாயாகி .....தாய்மையின் பெருமையை உலகுக்குக் காட்ட வந்தவள் " என்று அன்னைக்கு உணர்த்தும் வாய்ப்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார் குருதேவர்.
நன்றி : ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் , டிசம்பர் 2003.

No comments:
Post a Comment