"பிக்ஷாண்டி ----பெரியவா:
ஒருநாள் பகல் வேளை சந்திர மௌலீஸ்வரர் பூஜை அப்போதுதான் முடிந்திருந்தது.
"பிக்ஷைக்காரர் எல்லாம் இந்த பக்கமா வாங்கோ" என்று உரக்க சொன்னார் மடத்து சிப்பந்தி ஒருவர். தமக்குத்தாமே பேசி கொள்வது போல பெரியவா, "அப்போ நான்தான் அந்தபக்கம் போய் நிக்கணும்" என்றார்.
சிறிது நேரம் கழித்து, "நான்தானே பிக்ஷைக்காரன்" என்கிறார். "சம்ஸ்க்ருதத்தில் "பிக்ஷை"தான் தமிழில் "பிச்சை" ஆனது. பிக்ஷைகாரர்கள் என்பதையே பிச்சைக்காரர்கள் என்றால் அவர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்களா? நிஜத்திலும் நான்தானே "பிச்சைக்காரன்!" பிச்சை போடுகிரவனா பிச்சைக்காரன்? வாங்குகிறவன் தானே பிச்சைக்காரன்?"
"பிக்ஷாண்டி" "பிக்ஷாடனமூர்த்தி" எனும் தன உண்மை நிலையை சொல்லி கொண்டாரோ என்னவோ நம் உம்மாச்சி தாத்தா!
No comments:
Post a Comment