Friday, September 5, 2014

கோவிந்தபுரம்  போய்விட்டு  வா:




காஞ்சி பீடத்தின் 59வது பீடாதிபதியாக இருந்து, தன்னுடைய குருவான ஸ்ரீ ஆத்ம போதேந்த்ராள் [பண்ருட்டி அருகே உள்ள வடவாம்பலத்தில் இவருடைய அதிஷ்டானம் இருக்கிறது] கட்டளைப்படி ராமநாம ஸித்தாந்தம் செய்தவர் ஸ்ரீ போதேந்த்ர சரஸ்வதி. இவருடைய ஜீவ சமாதி இருக்குமிடந்தான் கோவிந்தபுரம். [கும்பகோணம் - ஆடுதுறை மார்கத்தில் இருக்கிறது]

"இன்னும் போகலை பெரியவா....."

சிரித்துக்கொண்டே "ஒரு தடவை அந்த ஊருக்கு போய்ட்டு வா.....புரியும்!" ப்ரஸாதம் குடுத்து அனுப்பிவிட்டார். இந்த பக்தரும் கோவிந்தபுரம் எங்கிருக்கிறது போன்ற விவரங்களை யாரிடமும் கேட்டுக் கொள்ளாமல், ஊருக்குப் போய்விட்டார்.

அவர்கள் குடும்பத்தில் வருஷாவருஷம் பெரியவா ஜெயந்தி விமர்சையாக நடக்கும். அப்போது சுமங்கலிகளுக்கு கொடுப்பதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் ஒரு குடும்பத்தாரால் நெய்யப்படும் புடவைகளை specialஆக ஆர்டர் பண்ணி வாங்குவார்கள். அந்த வர்ஷம் அந்த பக்தரும் அவர் மனைவியும் குத்தாலம் சென்று புடவைகளை வாங்கிக் கொண்டு மெயின் ரோடு வந்து பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தனர். சேலத்துக்கு எந்தப்பக்கம் நிற்க வேண்டும் என்ற கேள்வியோடும், வயிற்றைக் கவ்வும் பசியோடும்!

அப்போது ஒரு கார் அவர்கள் அருகே வந்து நின்றது. உள்ளே இருந்த டிரைவர் கீழே இறங்கி இவரிடம் வந்து,

"என்ன சார்? நீங்க கோவிந்தபுரம் போகணுமா?.." என்றார்.

யாரோ பொட்டில் அடித்தது போல் இருந்தது அந்த பக்தருக்கு! என்னிக்கோ பெரியவா கேட்ட கேள்வியல்லவா இது!

முன்பின் பார்த்திராத அந்த டிரைவரை வியப்போடு ஏற இறங்கப் பார்த்தார்......"ஆமா......" மந்திரித்து விட்டது போல் பதில் சொன்னார்.

"ஏறுங்க ஸார்....வண்டியில, கோவிந்தபுரம் கொண்டுபோய் விடறேன்..."

கொஞ்சநேரத்தில் கோவிந்தபுரம் மெயின் ரோடில் வண்டியை நிறுத்தி, "இப்பிடியே கொஞ்சம் நடந்து போனீங்கன்னா.... கோவில் வந்திரும்..தரிசனம் பண்ணிக்கிட்டு கெளம்புங்க!" என்று சொன்ன டிரைவர், பக்தர் குடுத்த வண்டிக்கான பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் போய்விட்டார்!

அகிலாண்டகோடி நாயகனுக்கு, வண்டி ஓட்டத் தெரியாதா என்ன?

ஏதோ கனவில் நடப்பது போல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு கோவிலை அடைந்தார்கள் தம்பதியாக. உள்ளே நுழையும் முன் ஒரு ப்ராஹ்மணர் அவர்களிடம் "வாங்கோ! வாங்கோ! ஒங்களுக்காகத்தான் wait பண்ணிண்டிருக்கோம்! மொதல்ல சாப்பாடு! அப்புறந்தான் எல்லாம்..." என்று கூறி, தரதரவென்று இழுக்காத குறையாக "போஜன சாலை" க்கு அழைத்துக் கொண்டு போனார்.

உள்ளே ரெண்டே ரெண்டு இலை காலியாக இருக்க, பல அடியார்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்பாடா! வயிறு நிறைந்தது!

அந்த ப்ராஹ்மணரே அதிஷ்டானத்துக்கும் அழைத்துக் கொண்டு போய் தர்சனம் செய்து வைத்தார்.

அந்த பக்தருக்கு நிச்சயம் கோவிந்தபுரம் அதிஷ்டானத்திலும் பெரியவா நினைவுதான் வந்திருக்கும். மஹான்கள் காலத்தால், உருவத்தால், உபதேசிக்கும் மார்க்கத்தால், பழகும் விதத்தால் வேறுபட்டாலும், ஜீவன் முக்தர்களான அவர்கள் எங்கும், எதிலும், எப்போதும் நிறைந்து இருக்கிறார்கள். அவர்களிடம் உண்மையான பக்தி கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், அவர்களுடைய அனுக்ரஹம் எல்லாருக்குமே சமமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் அதை உணர வேண்டும் என்று கொஞ்சம் ஆசைப் பட்டாலும் போதும், நமக்கு அது நிச்சயம் ப்ரத்யக்ஷமாகத் தெரியும்..

No comments:

Post a Comment