Thursday, September 4, 2014

சிவபெருமான் 

கண்ணுக்கு தெரியாத ஒரு தீய தேவதை, ஒர் அம்மாளை துன்புறுத்திக் கொண்டிருந்தது. அவள் கீழே உட்கார்ந்தால், தோளை பிடித்து அமுக்கும். ஓடினால், பின்னாலேயே துரத்திக்கொண்டு வரும். தூங்கினால், தட்டி எழுப்பி பயங்கரமாக சத்தம் செய்யும். அம்மள் எழுந்து உட்கார்ந்து அலறுவாள்.

உள்ளூர் மந்திரவாதிகளால் எதுவும் செய்ய முடியவில்லை.

பெரியவாளிடம் அம்மாளின் அண்ணா ராமநாதன், வந்து மிகவும் ப்ரார்த்திக் கொண்டார். பெரியவா விபூதி பிரசாதம் அளித்து அனுப்பினார்கள்.

எவ்வளவு முயன்றும் அம்மாளின் நெற்றியில் விபூதி இட முடியவில்லை. விபூதி இட வருபவரைக் கிட்ட நெருங்கவே விடவில்லை. ஒரே ஓட்டம்.

மறுபடியும் பெரியவாளிடம் வந்தார் அம்மாளின் அண்ணா ராமநாதன். பெரியவா ஒரு யந்த்ரம் எழுதச் சொல்லி, அதை ஒரு தாயத்துக் குப்பியில் சுருட்டி வைத்துக் கொடுத்தனுபினார்கள்.

மிகவும் சாமர்த்தியமாக, அம்மாளின் கழுத்துச் சங்கிலியில் தாயத்தை கோர்த்துவிட்டார் ராமநாதன். அடுத்த நிமிஷத்திலிருந்தே அந்த அம்மாள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாள். “தலையிலிருந்து ஒரு மலையே இறங்கிவிட்டாற் போலிருக்கு” என்று ஆனந்தமாக கூறினார் அம்மாள்.

பூத - ப்ரேத - பைசாச கணங்களுக்குத் தலைவர் சிவபெருமான். நம் உம்மாச்சி தாத்தாவும் அப்படித்தானே???

No comments:

Post a Comment