Friday, September 5, 2014

பெரியவாளின்  சமையல்  நுணுக்கம்:


பெரியவா எவ்வளவு பெரிய சமையல்காரர் தெரியுமா? ஒருமுறை கருணை கிழங்கு ஒரு மூட்டை நிறைய வந்து விட்டது. உடனே பெரியவா டேய் இனிமே காய் எதுவும் வாங்காதடா . இது தீர்ந்து போகும் வரை இதையே சமையலுக்கு வெச்சிக்கோன்னு சொல்லிட்டார். அடுத்தநாள் கருணைகிழங்கு போரியல் சாம்பார் எல்லாம் பண்ணி போட்டாச்சு. பெரியவா கூப்பிட்டு எல்லாம் நன்னா இருந்துதா எல்லாரும் சாப்டாலான்னு விசாரிச்சார் சமையல்காரர், எங்க பெரியவா சமைச்சதேல்லாம் அப்பிடியே இருக்கு, நாக்கு காரரதுன்னு (அரிக்கறது ) யாரும் சாப்பிடவே இல்லன்னார். 

உடனே பெரியவா அப்பிடின்னா உனக்கு காராம சமைக்க தெரியாதான்னு கேட்டார். சமையல்காரர் தேயாது பெரியவான்னு சொன்னார் அப்பிடின்னா காலைல என்ன கூப்பிடு நான் வந்து சரி பண்றேன்னுட்டு போயிட்டார். மறுநாள் நேரா ஒரு துண்டை கட்டிண்டுட்டு சமையல் ரூம்ல பொய் உட்கார்ந்துட்டு, சமையல்காரர பார்த்து வாழை தண்டு இருக்கான்னார். சமையல்காரர் இல்ல பெரியவான்னார். உடனே பெரியவா நீ என்ன பண்ற வாசல்ல வாழைமரம் கட்டி இருக்காளா பாரு. இருந்தா அடியில கொஞ்சம் வெட்டி எடுத்துட்டு வான்னார். (எப்பூடி). 

சமையல்காரர் கொண்டு வந்தார். இப்ப அதா துண்டு துண்டா நறுக்கி கொதிக்கற கருணா கிழங்கு பாத்தரதுல போடுன்னார். . போட்டார். பெரியவா, வேந்ததுக்கப்புரம் நீ எப்படி வழக்கமா சமைப்பயோ அதே மாதிரி இனிமே செஞ்சுடு. ஒன்னு தெரிஞ்சுக்கோ கருணா கிழங்குல வாழ தண்டு போட்டுட்டா அது அந்த காரற எபக்ட்ட எடுத் துடும். தண்டத்த எடுத்துட்டு குளிக்க போயிட்டார். 

பிக்ஷை   முடிஞ்சதுக்கு அப்புறம் சமையல்காரர கூப்பிட்டு இன்னைக்கு எல்லாரும் நன்னா சாப்டாலான்னு கேட்டார். சமையல்காரர் உடனே, சாப்டாலா கண்டேன் கண்டேன்னு சாப்டா எனக்கே இல்லா பெரியவா அப்டின்னார். இப்ப சொல்லுங்கோ யார் பெரிய சமையல்காரர்?

No comments:

Post a Comment