சந்நியாசிக்கான தகுதி:
ஆத்மாவைத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்ற சாதனையில் மேல்கட்டதுக்குப் போகும்போது கர்மாவைவிட்டு ,சந்நியாசியானால்தான் முடியும்.கர்மாவினால் தொட முடியாத வஸ்து ஆத்மா.அதை அதே விசாரமாக த்யானித்து த்யானித்து , அப்புறம் அந்த த்யான கர்மாவும் நின்றுபோய்விடுகிற நிலையில்தான் தெரிந்துகொள்ள முடியும். ‘கர்மாவும் பண்ணிக்கொண்டே த்யானமும் வைத்துக்கொள்கிறேன் ‘ என்றால் சரியாக வராது.
பந்தத்தைக் கத்தரிபதற்கு வாழ்கையை அர்ப்பணிக்கவேண்டும் .இதற்கு குடும்பம் , உறவு,உத்தியோகம் ஆகியவற்றையும் வைதிக கர்மானுஷடாங்களையும் கத்தரித்துப் போட்டுவிட்டுப் புறப்படவேண்டும்.
ஆனால் ஒன்றை மட்டும் மறக்கவே கூடாது.யார் வேணுமானாலும் கர்மானுஷாடாங்களை விட்டுவிட்டு “சந்நியாசி ஆகிறேன்” என்று கிளம்பலாம் என ஆசார்யால் சொல்லவே இல்லை.சித்த சுத்தி சம்பாதித்துக் கொண்டவனக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உண்டு என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment