Saturday, September 6, 2014

மிகச் சிறந்த பரிகாரம்/ஆசீர்வாதம்





ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி பெரியவாளிடம் வந்து, ” என் பையன் காலேஜுக்குப் போய் விட்டு திரும்பும் போது, மின் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டான். என்ன பாபம் பண்ணினானோ தெரியலை! அவன் அல்பாயுசுல போய்விட்டதனால பேயா, பிசாசா அவன் அலையக் கூடாது.அதற்கு ஏதாவது ஹோமம், பரிகாரம் செய்ய வேண்டுமென எல்லோரும் சொல்றாங்க. பெரியவா என்ன சொல்றாரோ அதன்படிதான் செய்யணும்னு நான் ஆசைப்படறேன். பெரியவா ஏதாவது சொல்லணும்”னு சொல்லிவிட்டு அழுதாள்.
பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, “அழாதே அம்மா !
உங்க கிராமத்துல வயல்ல வேலை செய்யற குடியானவ ஜனங்களுக்கு வெயிலில் குடிக்க மோர் குடு, உன் பிள்ளை நல்ல கதிக்குப் போயிடுவான்,ஹோமம், பரிகாரம் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்றார். இதமான அறிவுரை இது என்று கூடியிருந்தவர்கள் பிரமித்துப் போயினர். வயிறு குளிர்ந்து வாழ்த்துவது ஒன்றுதான் மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது புரிந்தது

No comments:

Post a Comment