Thursday, September 4, 2014

'ஷட்  பஞ்ச  பலம் ' னு  சொல்லலாமா?




என்னூருக்கு பக்கத்தில் கார்வேட் நகரில் நவராத்திரி பூஜை. படகை கயிறு கட்டி இழுப்பார்கள். வனாந்தரம். இயற்கை எழில் கொஞ்சும் ரம்யமான இடம். மஹா பெரியவா அன்றுதான் காஷ்ட மௌனத்தை முடித்திருந்தார்கள். அவர் எதிரில் சிஷ்யர்கள், ராமமூர்த்தி சர்மா, பிரவசனம் செய்தவர்கள், ஒரு வருமானத் துறை உயர் அதிகாரி மற்றும் பக்தர்கள். மஹா பெரியவா ரா.ச விடம் கேட்டார் 'உனக்கு மாசம் எவ்வளவு வருமானம், கடன் வாங்குவியா?' 'ரூ.300/- வரும், ரூ.10,20 கைமாத்து வாங்குவேன். வருமானத் துறை அதிகாரியின் பக்கம் திரும்பினார். 'எனக்கு ரூ.10,000/- சம்பளம், ரூ.3000/- வரைக்கும் கடன் வாங்குவேன்'. 'நமக்கு எவ்வளவு வந்தாலும் போதாது. ஏன்னா தேவைகளை ஜாஸ்தி பண்ணிண்டே போறோம். எப்போ போறும்னு தோன்றதோ அப்போதான் நல்ல கார்யங்கள செய்ய முடியும்'.

பேசும் போதே, ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து தோலை உரித்தார். வ.து.அ இடம் கொடுத்து 'இதுல எவ்வளவு சொளை இருக்கு?' என்று கேட்டார். அவர் அதை பாதியாக பீய்த்து, இந்த பக்கம் ஆறு, அந்த பக்கம் அஞ்சு' என்றார். 'அப்படின்னா இதை ஷட் பஞ்ச பலம் னு சொல்லலாம் இல்லையா? என்று மஹா பெரியவாள் கேட்தார். உடனே ரா.ச வும், வ.து.அ யும் அவர் காலில் விழுந்தனர். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர் தான் விஷயம் தெரிந்தது.

ரா.ச தான் வ.து.அ வீட்டிற்கு ப்ரோகிதம். ஒரு சமயம், ஆரஞ்சு பழத்திற்கு சம்ஸ்க்ருத பெயர் 'நாரங்க பலம்' என்பது தெரியாமல் 'ஷட் பஞ்ச பலம்' என்று சொல்லி நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார். வேத (வித்து) வாக்கு பொய்யாகாது என்பதைத் தான் இப்போது மஹா பெரியவா உணர்த்தினார். மஹா பெரியவா எப்பவும் சூட்ஷுமமாத்தான் சொல்லுவார். நாம் தான் புரிஞ்சுக்கணம்.

நம் ஹ்ருதயத்தில் உறையும் அவர், நம் எண்ணங்களையும், பேச்சையும், செயல்களையும் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறார். நாம், அவை எல்லாம் நல்லதாகவே இருக்க வேண்டும், அவருடைய நல் அருளை பெற வேண்டும் என்று அவரையே பிரார்த்தித்து அவரிடமே சரணடைவோம்.

No comments:

Post a Comment