Friday, September 26, 2014


அனாதை  பிரேதங்களை  எரித்து  பல  ஆயிரம்  அஸ்வமேத  யாகங்களை  செய்தவர் :


photo (22)
ஸ்ரீதர் – இவரை நீங்கள் விசுவின் அரட்டை அரங்கத்தில் பார்த்திருக்கலாம்.
இவர் ‘அனாதைப் பிரேத கைங்கர்ய டிரஸ்ட்‘ என்ற பெயரில் 2001-ம் ஆண்டு முதல்ஒரு மகத்தான பணியைச் செய்து வருகிறார்.  விருப்பப்பட்டால் இந்த உன்னதமான பணியில் நீங்களும் பங்கு பெறலாம்.
ஸ்ரீதர் தற்சமயம் அமெரிக்காவின் Ohio மாநிலத்திற்கு முதல் முறையாக விஜயம் செய்துள்ளார்.  இவர் சமீபத்தில் தான் எனக்குப் பரிச்சயம். ஆனால் பல ஆண்டுகளாகப் பழகினார்ப் போன்ற ஒரு உணர்வு. இவரை இன்னும் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஓரிரு முறை தொலை பேசியில் உரையாடியதுடன் சரி. மஹா பெரியவாளின் அனுக்ரஹத்தால், இவர் செய்து வரும் நற்பணியில் ஒரு சிறிய அணிலாக இடம் பெற ஆசை. பார்க்கலாம்…
Anatha Pretha Kainkarya Trust
G-2 Vijay Builders, plot No:24, Kandaswamy Nagar, 9th cross street,
Palavakkam, Chennai -600 041,
India
Mobile: 98407 44400
sreedhar.apkt@gmail.com
ஓவர் டு ஸ்ரீதர்…
திண்டிவனம் பக்கத்துலே ஒரு பத்தாவது கிலோமீட்டரில் இருக்கிற நல்லாம்பூர் அப்படீங்கற ஒரு சின்ன கிராமம். இந்த ஊர்ல தான் நாம் பிறந்தேன். என்னுடைய தகப்பனாரோட தகப்பனார், அதாவது என்னுடைய தாத்தாவும், மகா பெரியவாளோட பூர்வாசிரம தகப்பனாரும் ரொம்ப நெருங்கின சிநேகிதாளா இருந்தவா. ஒரு சமயம் பெரியவாளோட தகப்பனார் என்னுடைய தாத்தாவிடம், “கிருஷ்ணசாமி, உனக்கு இவ்வளவு நில புல சொந்தம் எல்லாம் இருக்கே, இதெல்லாம் எப்பவும் நிரந்தரமா இருக்கும்னு நினைச்சிண்டு இருக்கியா ? இதெல்லாம் காணாமப் போயிடும் ஒரு நாள். இதெல்லாம் இருந்ததுன்னே தெரியாமப் போயிடும். அப்படி ஆயிடும். ஆனா என்னென்னிக்கும் இருக்கக் கூடிய ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்டு. அது கல்வி. அதனால ஒரு சின்ன ஸ்கூல் ஒண்ணு இங்கே நீ ஆரம்பிக்கணும். அதுக்கு உனக்கு என்ன வேணுமோ என்னாலான உதவியை நான் கட்டாயமா செய்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். அவர் Education Department – ல் Inspector of Schools ஆக இருந்தவர்.
1903-ல்  நல்லாம்பூர் துவக்கப் பள்ளி‘ அப்படீங்கற பேரில் என் தாத்தா ஒரு பள்ளியை ஆரம்பித்தார். 1905-ல் அந்தப் பள்ளிக்கு recognition – ம் கிடைத்தது. அந்த மாவட்டத்திலேயே முதன் முதல் recognition கிடைத்த பெருமையும் அந்தப் பள்ளிக்கு உண்டு. அதன் பின்னர் பல வருடங்கள், அந்தப் பள்ளி Inspection – க்கு மஹா பெரியவாளின் தந்தை வந்திருக்கிறார். எங்கள் ஆத்தில் எல்லாம் தங்கியிருக்கிறார். அதை நாங்கள் மிகவும் பெருமையாக நினைக்கிறோம். எங்கள் தாத்தா காலத்திற்குப் பிறகு எங்க அப்பாவின் management – ல் இந்தப் பள்ளிப் பணி continue ஆகிக் கொண்டிருந்தது.
ஒரு காலக் கட்டத்தில் எல்லாப் பள்ளிகளையும் பஞ்சாயத்துக்குக் கொடுத்து விட வேண்டும் அப்படீன்னு ஒரு ரூல் கொண்டு வந்தா. அந்த காலக் கட்டத்தில் private management – ல் இருந்த பல ஸ்கூல்கள் மீது பல complaints வந்த காரணத்தால் அரசு இந்த ரூலைக் கொண்டு வந்தது. இந்த ஆணை பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனது அப்பாவுக்கு மிகவும் மனக் கஷ்டமாகி விட்டது. உடனே என் அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு, பெரியவாளை தரிசனம் செய்து விட்டு வரக் கிளம்பி விட்டார். எனக்குப் பனிரெண்டு வயதிருக்கும் அப்போது பெரியவா அப்பாவிடம், “சிவன் சாரோட தகப்பனார் உன்னோட வீட்டில் தங்கியிருந்து ஆகாரம் எல்லாம் பண்ணியிருக்கிறாரே, உனக்குத் தெரியுமா ?” என்று கேட்டார்.
எனது தகப்பனாரும், “ஆமாம், தெரியும்” என்று கூறியிருக்கிறார். “சரி, என்ன விஷயமா வந்திருக்கே?” என்று பெரியவா கேட்டார். என் அப்பா விஷயத்தைக் கூறியவுடன், ” சரி, எழுதிக் கொடுத்துடு. ஒண்ணும் ஆகாது” என்று சொல்லி பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கி அனுப்பி வைத்து விட்டார். பெரியவா பேச்சுக்கு மறுப்பேது? பஞ்சாயத்துக்கு எங்கள் பள்ளியைக் கொடுக்க சம்மதிக்கிறோம் என்று எழுதிக் கொடுத்து விட்டார் என்னுடைய அப்பா. இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஆர்டர் வந்தது. அதைப் படித்தவுடன், சந்தோஷத்தில் குதிக்கிறார் என்னுடைய அப்பா. ஒன்றும் புரியவில்லை எங்களுக்கெல்லாம். கடைசியில் என்னவென்று பார்த்தால் அதில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது.
“There are lot of complaints on the schools in this district. But, this particular school, “Nallambur Aided Elementary School” which was started in 1903 and got recognized in 1905 that is currently run by the son of the founder. There is not even a single complaint on this school. Hence this school can be continued to run under the present management. Rest of the schools in this district can be given to Panchayat.”
இந்த ஆர்டரைப் பார்த்த சந்தோஷத்தில் உடனே என்னையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் கிளம்பி விட்டார் என்னுடைய அப்பா. பெரியவாளை நமஸ்காரம் செய்தோம். “பெரியவா அனுக்ரஹத்தில் எல்லாம் நல்ல படியாக முடிந்தது” என்று கூறினார் அப்பா. அதற்கு பெரியவா சிரித்துக் கொண்டே, “காமாட்சி அப்படிப் பண்ணிட்டாளாக்கும்!” என்று கேட்டார். என் அப்பா, “பெரியவா, நீங்க எழுதிக் கொடுத்துடு, ஒண்ணும் ஆகாது அப்படீன்னு சொன்னப்ப நிஜமாவே எனக்கு ஒண்ணும் புரியலே… எழுதிக் கொடுத்துடு… ஒண்ணும் ஆகாது-ன்னா எப்படி அது அப்படீன்னு நினைச்சுண்டிருந்தேன். ஆனா பெரியவா சொல்றா… நாம பண்ணிடணும்னு அப்படியே பண்ணிட்டேன். இப்பதான் எனக்கு அதுக்கு அர்த்தம் புரிகிறது” என்று கண்களில் ஜலம் மல்க நமஸ்காரம் செய்தார்.
இந்த மாதிரி பனிரெண்டு வயது சிறுவனாக நான் இருந்த காலத்திலேயே , “எல்லாமே நான் தான்!” என்று என்னை ஆட்கொண்டு விட்டார் மஹா பெரியவா!”
ஸ்ரீதரின் அனுபவம் தொடரும்…
–Courtesy: Mahesh Krishnamoorthy, Mr.Sivaraman, Chennai (Video Interview, Oct 1, 2012 – Transformed by ‘Deivathin Kural’ – Mr.Sreedhar
மஹா பெரியவா அருள்வாக்கு : -
  • அச்வமேத யாகத்தை நம் எல்லோராலும் பண்ண முடியுமா ? அச்வமேதத்துக்கு சமமான பலனைத் தரும் ஒரு பணி இருக்கிறது. மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்ததான அந்தப் பணிதான் அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம். பரோபகாரமாக, இறந்து போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து நமக்கும் உபகாரம் பண்ணிக் கொள்கிறோம்.

  • எந்த வீட்டில், யார் இறக்கும் தறுவாயிலிருந்தாலும் யாரும் கூப்பிடாமலேயே அங்கு சென்று 1008 தடவை ராமநாமம் சொல்லிவிட்டு வர வேண்டும். அந்த ஆத்மா முக்தி அடைந்துவிடும். இது ஜீவாத்ம கைங்கர்யம்.
 நன்றி : balhanuman's blog

No comments:

Post a Comment