Friday, September 5, 2014

வருத்தப்பட்டு  தரது  வேண்டாமே!


மடத்துக்கு இந்த பீரோ வேண்டாம் 

ஒருநாள் ஸ்ரீ மடத்தில் புதிதாக ஒரு பீரோ காணப்பட்டது 

அது பெரியவா கண்ணிலும் பட்டுவிட்டது 

"ஏது இந்த பீரோ" ? என்று மேனேஜரிடம் கேட்டார்கள்

".... வந்து... நம்ம ..... திருவாலங்காடு திருமூர்த்தி (ஒரு பக்தர்)
வாங்கி கொண்டு வைத்துவிட்டுப் போனார்...."

" அவர் எங்கே?"

"வெளியே நிக்கறார்...."

"கூப்பிடு"

ராமமூர்த்தி வந்தார்.

"இந்த பீரோவை எங்க வாங்கினே?.... பழசுக்கு பாலீஷ்
போட்டதோ ?

" சென்னைல மர்ரே கம்பனியில் ஏலத்தில் வாங்கினேன்
என்று பவ்யமா சொன்னார் பக்தர்.

" இந்த பீரோ மடத்துக்கு வேண்டாம்....."

மேனேஜர் உட்பட அனைவரும் திடுக்கிட்டனர் !!!!

ஒரு பக்தர் வீட்டில் இருந்த பீரோ இது, அவர் கடன்
வாங்கி இருந்தார் , கடனை திருப்பி செலுத்தாததால
ஜப்தி பண்ணி ஏலம் விட சொல்லிட்டா..... அவர் ரொம்ப
ஆசையாய் நேர்த்தியா இந்த பீரோவை செய்து
வாங்கினார், என்னமோ கஷ்டகாலம் இப்ப ஏலத்துக்கு
வந்திடுத்து, அவர் மனம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும்?
மனவேதனையோடு வந்த பொருள் மடத்துக்கு வேண்டாமே ?

பீரோவை கொண்டு வந்தவர் முகத்தில் அசடு வழிந்தது
"புது பீரோ ஸ்ரீ மடத்திற்கு காணிக்கையாய் கொண்டு
வந்தேன் என்று பெருமை பட முடியாமல் போய்விட்டது!

பெரியவாளின் ரத்தினச் சொர்களினூடே ஒளி வீசும்
பெரிய தத்துவத்தை நாம் புரிந்துகொண்டால் நல்லது.

No comments:

Post a Comment