Thursday, September 4, 2014

பெரியவா  கூறும்  சுயம்பாகம்:




நேரு, அடிக்கடி விவேகானந்தாவை கோட் பண்ணி, "kitchen religion " "அடுப்பங்கரை மதம்" என்று ஹிந்து மதத்தை தாம் ரொம்ப நன்றாக பரிஹாசம் செய்கிறோம் என்று நினைக்கிறார், வாஸ்தவத்தில் அவர்தான் ஹிந்து மதத்தின் சாரத்தை புரிந்துகொண்டு அதற்கு certificate தருகிறார்; நம் மதம் அடுப்பங்கரை மதம்தான்" என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்தார். 

"நாரதர் சனத்குமாரரிடம் போய் ஆத்மவித்தை உபதேசிக்க சொன்னார். அப்போது சனத்குமாரர், "ஆஹார சுத்தவ் சத்வ சுத்தி;" என்றுதான் ஆரம்பிக்கிறார். சாந்தோக்கிய உபநிஷத்திலேயே இந்த விஷயம் இருக்கிறது. "தூய உணவில் ஆரம்பி; அதுதான் குணம் தூய்மை ஆவதற்கு வழி. இப்படி சித்த சுத்தி ஏற்பட்ட பின்தான் படிப்படியாக ஈஸ்வர ஸ்மரணம், கட்டுக்கள் விடுபட்ட மோக்ஷம் எல்லாம் சித்திக்கும்" என்று சனத்குமாரரே kitchen religion ல்லதான் ஆரம்பிக்கிறார்" என்றார்.

இன்னொருத்தர் உதவியில்லாம அவாவா கார்யத்தை அவாவாளே பண்ணிக்கறா மாதிரி கல்வித்திட்டத்ல கொண்டு வரணும்ன்னுதானே சமூஹ சீர்திருத்தவாதிகள் சொல்லறா? அதுனாலதான், வாழ்க்கைக்கு முக்யமா வேணுங்கற அன்னத்தை அவனவன் ஸ்வயம்பாகம் பண்ணிக்க கத்துக் குடுத்துட்டா அதுதான் நெஜமான சீர்திருத்தம். சாஸ்த்ர வாக்யம் ஒண்ணு இருக்கு..."பஞ்சாசத் வத்ஸராத் ஊர்த்வம் ந குர்யாத் பாணி பீடநம்" அப்படீன்னா அம்பது வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கக்கூடாது. புருஷாளுக்கே வயசானாவிட்டு, சமையல் பண்ண தெரிஞ்சிருக்கணும்ன்னு சாஸ்த்ரம் சொல்றது. சமையல் தெரிஞ்சுட்டா, வானப்ரஸ்தம் போக வேண்டிய வயஸ்ல தாம்பத்யத்துக்கு திரும்பற ஆபாசம் நடக்காம இருக்குமோல்லியோ?

முன்னமாதிரி இல்லாம இப்போ பக்ஷிகள் மாதிரி பூலோகத்ல எங்கெங்கே வேலை உண்டோ, அங்கங்கே போகணுங்கற நெலைமைல ஸ்வயம்பாகம் அத்யாவஸ்யமாறது. சுத்தத்துக்கு சுத்தம்; ஸத்வத்துக்கு ஸத்வம்; அதோட வெந்ததும் வேகாததுமா, கண்ட கையால சமைச்சததை ஹோட்டல்ல சாப்ட்டு சாப்ட்டு, சின்ன வயஸ்லேயே அல்சர், அது இதுன்னு அவஸ்தை படாம இருக்கலாம். சின்னதா ரொட்டி, பொங்கல் மாதிரி பண்ணத் தெரிஞ்சிண்டா போறும். இப்போ என்னடான்னா, கணக்கு வழக்கில்லாம வ்யாதிகள்தான் சர்வ வ்யாபகமா இருக்கு.

ரொம்ப தூரம் ப்ரயாணம் பண்ணணும்னாக்கூட பூரி, சத்துமா இதுகளை பண்ணி எடுத்துண்டு, பாலையோ, மோரையோ விட்டு சாப்ட்டுக்கலாம். அரிசியை நன்னா செவக்க வறுத்து பொடிச்சு வெச்சிண்டா அதுதான் சத்துமா. அதுல பாலையோ, மோரையோ விட்டு சாப்டா, புஸ்ன்னு ஊறிண்டு பசியடங்கி, புஷ்டியாவும் இருக்கும். 'குக்கர், கிக்கர்' கூட வேண்டாம். சுலபமா நாலைஞ்சு தினுசு அதுல பண்ணிக்கலாம்தான். ஆனா, குக்கர்ன்னு ஆரம்பிச்சா, அப்புறம் அஞ்சறைப்பெட்டி, ரொம்ப புளி, காரம் ன்னு எல்லாம் கூடவே வரும். உடம்புக்கு வரும். பரிஹாரமா மருந்து, அந்த மருந்துல அநாச்சாரம்...ன்னு போய்ண்டிருக்கும். அதுனால, ஒரு சாமான், ரெண்டு சாமான்னு வெச்சிண்டு, ஸாத்வீகமா பெரியவா சொல்றா மாதிரி, மதுரமா, ஸ்நிக்தமா லேசான ஆகாரத்தை நாமே தயார் பண்ணி சாப்பிடணுங்கறதை "ஜன்ம வ்ரதமா" எடுத்துக்கணும். "ஸ்நிக்தம்" ன்னா பசையுள்ளதுங்கறதுக்காக நெய் சொட்ட சொட்ட இருக்கணும்னு அர்த்தமில்லே.வறட்டு வறட்டுன்னு இல்லாம பால்லையோ, மோர்லையோ ஊறினதா இருக்கணும்.

சரி. அப்பிடி ரொம்ப சிம்பிளா சமைசுண்டா, அதிதி சம்ஸ்காரம் எப்பிடி பண்ணறது? அதையும் பெரிய தர்மமா சொல்லியிருக்கேன்னா, வர்றவாளுக்கு பாலும், பழமும் குடுக்கலாம். நம்ம கையால குடுக்கறது, அவாளோட குக்ஷில போகணும். அவ்வளவுதான். அந்தக் காலத்ல திருடனுக்கு கூட பால்சாதம் போட்டுட்டா, அவன் அந்த ஆத்ல திருடமாட்டான். நல்ல எண்ணத்தை வளக்கறது பால். அதுனாலதான் பாலோட, பழத்தையும் சேத்து குடுக்கச் சொல்றேன்.

எல்லாத்துக்கும் மேல, நாம சமைச்சதை பகவானுக்கு நிவேதனம் பண்ணிட்டு அதுல இருக்கற கொஞ்ச நஞ்ச தோஷத்தையும் போக்கிடணும். வேற மூர்த்தி, விக்ரஹம் இல்லாட்டா கூட, ப்ரத்யக்ஷ தெய்வமா இருக்கும் சூர்ய பகவானுக்கு நிவேதனம் பண்ணிடணும். 

No comments:

Post a Comment