Thursday, September 11, 2014

தெய்வீகச் சிந்தனை : மஹா பெரியவா

பிரபஞ்சத்தின்  தாய் தந்தை - சிவபெருமானும் , பார்வதியும் :


   
















  


நம்மால்  மறுக்க முடியாத,   மிக  நன்றாக        தெரிந்த   உண்மை , பிறந்த  எல்லாரும் ஒருநாள்  இறந்தே  ஆக  வேண்டும் .   யாரும்  இதிலிருந்து   தப்பிக்க  முடியாது.  ஆசையே  பிறப்புக்கு  காரணம் .  காலமே  நமது  இறப்புக்கு  காரணம்.  

ஆசையால் ....ஆசைப்பட்டு  உருவான  எல்லாம்  ஒருநாள்  காலத்தால்  அழிக்கப்படும் .  ஆசை'   இருந்தால்  அதுவே  பிறவிக்கு  வித்தாகிறது.

  வாசனைகள் ( சூட்ஷும  ஆசைகள் )  ஆகிய
 விதைகளே  இறப்பின்போது  சேகரிக்கப்பட்டு  அடுத்த  பிறவிக்கு  விதையாகிறது.  விதையும்  காலத்தால்   மரமாகிறது.  மீண்டும்  காலத்தால்  மரம்  இறந்து   விதையாகிறது.

விதை -  காலம் - மரம் - காலம்  -  விதை.

இப்படியும்  பார்க்கலாம்.     

காலம்  -  விதை  - காலம்  -  மரம்  - காலம்.

(ஆசை - விதை - பிறவி  )  ( காலம்  - மரம்  - மரணம் )

"காலோ  ஜகத்  பாக்ஷாக "

சூரியனுக்கும் , சந்திரனுக்கும் .....ஏன்  இந்த  பிரபஞ்சமாகிய  பல்வேறு  உலகங்களுக்கும்  காலம்  உண்டு .  எல்லாம்  ஒருநாள்  இல்லாது  போய்டும்.
அதற்குரிய  காலத்தில்  அவை  அழிந்துவிடும்.

சரி,  இப்படி  பாருங்கள் ......எங்கு  விதை  இல்லயியோ ......அங்கு   உற்பத்தியில்லை ...... அதனால்   பிறவியில்லை ........  காலமில்லை..

காலமில்லாததனால்   அங்கு  அழிவுமில்லை ....மரணமில்லை.

இதனால  என்ன  தெரியருதுன்னா ......நாம  ஆசையையும் , காலத்தையும்  கடந்தே  ஆகணும் ,  இந்த  காமத்தையும் ( ஆசை ),  காலத்தையும்  யாரவது  ஜெய்சீருக்காலானு ......பார்த்து ......அவாள   சரணடையனும்!

ஈச்வரன் தான்  காமத்தை  எரிச்சு  ,  காலனை   காலால்  உதச்சு  ஜெயிச்சிருக்கார் . சிவனையே  சரணடைந்தோம்னா .....நமக்கும்  மரணமோ , .....பிறப்போ  இருக்காது. 

அதனால்தான்  அவாளை  பிரபஞ்சத்தோட  பிதாவாவும் , மதாவாவும்  அழைக்கிறா  .... அவ்வாளும்   நம்மை   அவ்வாளோட   குழந்தைகளா     ரட்சிக்கிரா! ......

" ஜகதா  பிதாராரு  வந்தே  பார்வதி  பரமேஸ்வரர்ரு " 

                                                                                       ----மஹா  பெரியவா 

நன்றி :  www. periyava.org





No comments:

Post a Comment