Saturday, September 6, 2014

ஆப்ரம்ம கீட ஜனனி

 
 
 
 
 
 
1 Votes
 
 
ஹாஸ்பெட் நகரில் முகாம்.
பிற்பகல் சுமார் ரெண்டு மணிக்கு, திடீரென்று, “டேய்! அந்த  சமையல் கட்டையும், சாப்பாடு நடந்த மண்டபத்தையும் ஒடனே காலி பண்ணச் சொல்லுங்கோ!  அன்னபூரணி கோவிலை ஒட்டினாப்ல இருக்கற  இடத்துக்கு போகச் சொல்லுங்கோ!”
பெரியவா அவசர உத்திரவிட்டார்.
இட்லிக்கு மாவு அரைத்துக்கொண்டிருந்த பாரிஷதர்
“அஞ்சே நிமிஷம். அரைச்சதை எடுத்து வெச்சுடறேன்…” என்றதும்
“போட்டது போட்டாப்ல ஒடனே வெளில வரச்சொல்லு! “
அதிலும் பரம பரம காருண்யம்……..
“சமையக்கட்டுல ஒரு பூனையும், குட்டிகளும் இருக்கும். அதுகளையும் வெளில தொரத்திடுங்கோ!”
பரபரவென்று உத்தரவானதும், பூனை அம்மா, குட்டிகள் சஹிதம் அத்தனை பேரும் ஓட்டமாய் மண்டபத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர்….
அடுத்த அரைமணி நேரத்தில், என்ன காரணமோ, மண்டபம் மெதுவாக சரிய ஆரம்பித்தது!
பெரியவா “ஆப்ரம்ம கீட ஜனனி” இல்லியா? அவருக்கு பாரிஷதர்களும், பூனைக்குட்டியும் அவருடைய குழந்தைகள்தான்!
நன்றி: sage  of  kanchi       

No comments:

Post a Comment