Thursday, September 4, 2014

நினைவில் நின்ற லிங்கம்:


“ஒரு குன்றின் மீது பஞ்சமுக லிங்கம் இருந்ததே? அது எங்கே இருக்கிறது?”” என்று பெரியவா காளஹஸ்திக்கு விஜயம் செய்தபோது தேவஸ்தான அதிகாரிகளை வினவினார்கள்.

“”பஞ்சமுக லிங்கமா, இவ்வூரிலா?”” என்று கோயில் அதிகாரிகள் திகைப்படைந்தார்கள். “அத்தகைய கோயில் எதுவும் இப்பகுதியில் இருப்பதாகத் தெரியவில்லையே”’ என்று ஊர் மக்களும் கூறினார்கள்.

பெரியவாளின் நினைவாற்றல் அபாரமானது. 1932ஆம் ஆண்டிலும் 39ம் ஆண்டிலும் பெரியவா காள்ஹஸ்தியில் பஞ்சமுக லிங்கத்தைத் தரிசித்ததாக உறுதியோடு சொன்னார்கள். பின்பு ஊர்ப் பெரியவர்கள் சிலரை அணுகி, தேவஸ்தான அதிகாரிகள் இதை பற்றி விசாரித்தார்கள். ‘பிரம்மகுடி”’ என்ற குன்றின் மேல் இருப்பதாக அவர்கள் விபரம் கூறினார்கள்.

அதிகாரிகள் பிரம்மகுடி குன்றைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். ஆனால், அக்குன்றின் மேல் கோயில் இருக்கிறதா என்பதை அறிய முடியாமல் குன்று, மரங்களாலும் புதர்களாலும் மூடப்பட்டிருந்தாது.
பெரியவா,’ கோயிலுக்கு போக வழி அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். உடனே புதரை வெட்டி வழிதோறும் வேலை நடப்பதை மேற்பார்வை செய்து வந்தார்கள். பத்து நாட்கள் தொடந்து வேலை நடந்தது. பின்பு குன்றின் மீது உள்ள கோயில் தென்பட்டது. தேவஸ்தான அதிகாரிகளும் ஊராரும் பெரியவாளின் நினைவாற்றலை எண்ணி வியப்படைந்தார்கள்.

உம்மாச்சி தாத்தா “இனி இந்த கோயிலில் நித்ய பூஜை நடத்தப்பட வேண்டும்” என்று அருளாணையைப் பிறப்பித்தார்கள்.

திருவாணைக்கவிலும், நேபாளத்திலும் உள்ள பஞ்சமுக லிங்கங்களுடன் பிரம்மகுடி லிங்கமும் பிரசித்தி பெற்றது !!!

No comments:

Post a Comment