Thursday, September 4, 2014


சர்வக்ஞத்வம் இதுதானோ?



ஸ்ரீமடத்து யானைக்கு தினமும் சாயங்காலம் வெல்லம் சேர்த்து, பெரிய பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். பாகன் தன் கைகளால் உருண்டைகளை எடுத்து யானையின் வாய்க்குள் கொடுப்பார். 

ஒருநாள் யானைக்கு உணவு கொடுக்கும்போது பெரியவா தற்செயலாக அங்கே வந்தார். உருண்டைகளாக சாதம் உருட்டி வைத்திருந்ததை பார்த்தார். 

சிஷ்யரிடம் "இந்த உருண்டைகளை யானைக்கு குடுக்க வேணாம்னு பாகனிடம் சொல்லிடு"

மானேஜரை கூப்பிட்டு, "யானைக்கு குடுக்கறதுக்கு வெச்சிருந்த அன்னம் செரியா வேகவே இல்லை; காய்ஞ்சு பொறுக்கு தட்டி போயிருக்கு. இப்பிடில்லாம் அசிரத்தையா தீனி குடுக்க கூடாது. வாயில்லா பிராணிங்கறதுக்காக வெந்ததும் வேகாததுமா சாதம் குடுக்கலாமா? பாகன்ட்ட சொல்லி வைங்கோ. சாக்ஷாத் கஜமுகனுக்கு நைவேத்யம் பண்றா மாதிரி, யானைக்கு சாதம் குடுக்கணும், அத்தனை பக்தி வேணும்; ச்ரத்தை வேணும்! புதுசா சாதம் வடிச்சு போடசொல்லுங்கோ!"

சிஷ்யர்கள் நெகிழ்ந்து போய்விட்டார்கள். ஒரு வாயில்லா பிராணியிடம் இவ்வளவு பரிவா! சாத உருண்டைகளை பெரியவா கையால் கூட தொடவில்லை. ஏன்? ஒரு வினாடி கூட அங்கு நிற்கவில்லை. அதற்குள் வேகவில்லை, பொறுக்கு தட்டிவிட்டது என்றெல்லாம் எப்படி தெரிந்து கொண்டார்?

சர்வக்ஞத்வம் இதுதானோ?

No comments:

Post a Comment