Friday, September 12, 2014

சாபமே வரமாய் ..........

நளன்  பெற்ற  சாபம் :


             சாதாரணமாக   கல்லைத்  தண்ணீரில்  போட்டால்  மூழ்கிவிடும். ஆனால்    ராம பிரானும்,   மற்ற  வானரங்களும்    கடலில்  இட்ட  கற்கள்   மிதந்தது,   எப்படி   தெரியுமா ?   

       இலங்கைக்குச்  செல்ல  சேது  அணை,   வங்கக் கடலில்   கட்டப்பட்டது.  அப்போது ,  நளன்  என்பவன்  மற்ற  வானரங்கள்  கொண்டு  வந்து  கொடுத்தக்  கற்களை   கடலில்  வைத்தபோது  அவை  எதனால்  மூழ்கவில்லை ....காரணம்  உண்டு !  காரணம்  இல்லாமல்  காரியமா ?  பார்ப்போம் ......

          சுக்ரீவனின்  வானர  படையில்  உள்ள  வீரர்களில்  ஒருவனே  இந்த  நளன். இவன்  விஸ்வகர்மாவின்  மகன் . ஒரு சமயம்  கங்கைகரையில்  உள்ள  மரங்களின்  கனிகளைப்  பறித்துத்  திண்பதும்,  மரங்களுக்கிடையேத்  தாவித்தாவி   திரிவதுமாக  இருந்தான்.

     அப்போது  சற்று  தூரத்தில்,   ஒரு  அந்தணர்   தகுந்த   ஆச்சாரத்துடன்  சாளக் கிராமத்தை  வைத்து  பூஜை  செய்து  கொண்டிருப்பது  அவன்  கண்களில்   பட்டது.

      மிகவும்  மெதுவாகச்  சென்று ,  அந்தணர்  அறியாமல் ............ஒரு  விளையாட்டுத்  தனமாக  அந்த  சாளக்கிராமத்தை   எடுத்து  கங்கை  நீரில்  வீசி  எறிந்துவிட்டான்.

    கோபம்  கொண்ட  அந்தணர் ......." நீ  தண்ணீரில்  எதை  எறிந்தாலும்,  அது  மூழ்காமல்  மிதக்கட்டும் "   என்று  சாபம்  இட்டார். அதனால்  தான்   கடலில்  நளன்  வைத்த  கற்கள்  எல்லாம்  மூழ்கிவிடாமல்  நின்றன.

    ராம  கைங்கர்யத்துக்கு  இந்த  சாபமே  .....உபயோகமானதாக  இருந்தது.

  

குறிப்பு :  
                    வெறுமனே  கற்கள்  மிதந்தால் .....அவைகள்  அலைகளால்  அடித்துச்  செல்லப்படுமே! ....அவைகள்  தங்களுக்குள்  இணைப்பையும்  ஏற்படுத்தி  நகராமல்  இருக்கவும் .........ஒரு  கட்டுக்கோப்பாக  கடலின்  அலைகளால்  இடம்  பெயராமல்    இருக்கவும் .........காரணம் ....ஸ்ரீ  ராம  நாமமே ! 
எப்படி  எனில்  அணுக்கருச்  சிதைவும் ,  அணுக்கரு  இணைவும்  .....மூலக்கூறு  பிணைப்புகளும்....கற்களாய்  மாறி  .... அவற்றின்  எலெக்ட்ரான் ...ப்ரோடான் .....நியுட்ரான் .....இவற்றினுள் ....நுண்ணிய ....இணைப்பை  ஏற்படுத்துவது (அணுவுக்கும்  அணுவாய்  இருப்பவன், ........  நாமமே  இறைவன் ,  இறைவனும்   அவன்  நாமமும்  ஒன்றே !  ) .....ராம  நாம  அதிர்வலைகளே!

No comments:

Post a Comment