Thursday, September 4, 2014

உண்மையில்  யார்  நல்லவன்:




பெரியவா’ தங்கியிருந்த அறையில் மூட்டை பூச்சி பல்கிப் பெருகியிருந்தது. 

தரையில் கால் வைத்த இடத்திலெல்லாம் மூட்டைப்பூச்சி. பெரியவா’ சரீரத்தில் சில சமயம் தேனீக்காளாக அப்பிக் கொண்டு விடும், சில சமயங்களில்.

மூட்டை பூச்சி ஒழிப்பு மருந்து கொண்டு வந்தார் ஓர் அன்பர். பெரியவாளுக்கு இது விஷயம் தெரிந்து விட்டது. அன்பரை கூப்பிட்டார்கள்.

”’நம்முடைய சரீர போஷணைக்காக நாம் உணவு உண்கிறோம். மூட்டைப் பூச்சிகளுக்கு உணவு, மனித சரீர ரத்தம். மூட்டைப் பூச்சிகள் தங்கள் அன்னத்தைத் தானே எடுத்துக் கொள்கின்றன! உணவு இல்லாமல் அவைகள் எப்படி உயிர் வாழும்?

“’ஜீவஹிம்சை கூடாது. நமக்கு உபகாரம் செய்தவனிடத்தில் நாம் பிரியமாக இருக்கிறோம் என்றால், அது ஆச்சரியமில்லை; அபகாரம் செய்தவனிடத்திலும் பிரியமுள்ளவனாக இருப்பவந்தான் உண்மையாகவே நல்லவன் – என்று பெரியோர்கள் கூறுவார்கள்’”

இதைக் கேட்ட பின்னரும், பெரியவா அறையில் மூட்டைபூச்சி மருந்து தெளிப்பதற்கு, அன்பருக்கு மனம் வருமா, என்ன?

இது ஆச்சரியமில்லை. இந்த உரையாடல் நடந்த இரண்டொரு நாட்களில் மூட்டை பூச்சிகள் மாயமாக மறைந்து விட்டது – அதுதான் அதிசயம்!

மூட்டை பூச்சிகளுக்குப் உம்மாச்சி தாத்தாவின்' பாஷை – பாவ(ச)ம் புரிந்திருக்குமோ???

No comments:

Post a Comment