கிராம தேவதையை கவனி !
”எங்கள் கிராமத்தில் உள்ள சிவாலயம் பல வருஷங்களாகத் திருப்பணி செய்யப்படாமலும் அஷ்டபந்தன மருந்து சார்த்தப்படாமலும் இருக்கிறது” என்று வருத்தத்தோடு சொன்னார் ஒரு அன்பர். “யாரவது திருப்பணி செய முன் வந்தால் அவருக்கு பல இடையூறுகள் வருவதால், முனைப்பாக செயல்படப் பலரும் பயப்படுகிறார்கள்” என்றார்.
பெரியவா சொன்னார்கள் “உங்கள் ஊரில் ஒரு கிராம தேவதை – பெண் தேவதை – இருக்கே? முதலில் அந்தத் தெய்வத்துக்கு விசேஷமாக, கிராமத்தின் சார்பில், அபிஷேக ஆராதனைகள் செய்து, புது வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்து, விரிவாக பூஜை செய்துவிட்டு சிவன் கோயில் திருப்பணி ஆரம்பியுங்கள்.”
அன்பர் கிராமத்தாரிடம் சென்று உம்மாச்சி தாத்தா சொன்னதை கூறினார்.
கிராமத்தார்களுக்குத் தங்கல் தவறு புரிந்தது. உடனே கூட்டம் போட்டு, நாள் குறித்து கிராம தேவதைக்கு கோலாகலமாக விழா எடுத்தார்கள். அப்போது ஒரு பெண்ணுக்கு ஆவேசம் வந்து, “சந்தோஷம், சந்தோஷம்” என்று கூச்சலிட்டு மயக்கம் அடைந்தாள்.
பின்னர், சிவன் கோயில் திருப்பணிகள் எவ்விதத் தடங்களும் இன்றி நடந்து, கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
நம் உம்மாச்சி தாத்தாவுக்கு, கிராம தேவதைகளிடம் அத்யந்த பக்தி !!!

No comments:
Post a Comment