Thursday, September 4, 2014

"யாந்தா-பாந்தா"--ராம  ராம 




மகானின் திருவடி நினைவுகள்.....

திருவையாறு தியாகப்ரஹ்மத்தின் சமாதி சுற்று மண்டபத்தின் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருந்த சமயம்.....

சுற்று சுவர்களில் தியாகராஜரின் கீர்த்தனைகள் அதற்கான தமிழ் அர்த்தங்களுடன் சலவை கற்க்களில் வடிக்கபட்டு பதிக்கும் பணி நடைபெற்று வந்த நேரம்....

திருப்பணி குழு தலைவர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாசாரியார்......

தியாகராஜரின் பல பாடல்களில் "யாந்தா-பாந்தா" என்ற சொற்க்கள் இருந்தன.... அதற்கான தமிழ் விளக்கத்தை தெலுங்கு அகராதிகள், கல்விச்சாலைகள், அறிஞர்கள் என்ற எல்லா தரபினரிடத்தும் தேடி அர்த்தம் புரியாது, பணி பாதியில் நிறுத்தபட்டது....

ஒரு நாள் விடியற்காலையில் எம்பார் விஜயராகவா சாரியார் அவர்களுக்கு, ஒரு எண்ணம் தோன்றியது.... மகான் களின் வாக்கு மகான்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் என்ற நினைவு.......

எம்பார் விஜயராகவாசாரியார் நேராக காஞ்சி மா முனிவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் சந்நிதிக்கு வந்தார்...பரஸ்பர நல விஜாரணைகளுக்கு பிறகு, தனது "யாந்தா-பாந்தா" குழப்பத்தை ஸ்ரீ ஸ்வாமிகளிடம் எம்பார் தெரிவித்தார்....

சுவற்றில் எறியப்பட்ட பந்து போல பதில் திரும்ப வந்தது..... அந்தம் என்றால் முடிவு, "ய" என்ற எழுத்தின் அந்தம் "ரா" - "ப" என்ற எழுத்தின் அந்தம் "ம" - யாந்தா- பாந்தா என்ற பதத்தின் மூலம் "ராம" என்ற மந்திரத்தை சூக்ஷமமாக தியாகராஜர் சொல்லி இருக்கிறார் என்று பதில் சொன்னார் ஸ்ரீ ஸ்வாமிகள்.

No comments:

Post a Comment